கொரோனாவினால் நாடே அரண்டு கிடக்கும் நிலையில், பாதிக்கபட்ட மக்கள் அனைவரும் மருத்துமனையில் சிகிச்சை பெறுவதும் சாத்தியமில்லை. எனவே, வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும் கோவிட் நோயாளிகளுக்கு மூன்று அடுக்கு மருத்துவ முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக மத்திய அரசு இன்று புதிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
 
மத்திய மற்றும் மாநில அரசுகள் கோவிட் நோயாளிகளுக்காக அவ்வப்போது புதுப்புது வழிகாட்டுதல்களை வெளியிடுகிறது.


அதன் வழிகாட்டுதல்களில், COVID பாதித்தவர்கள், நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுல்ளது. உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருப்பதை பராமரிக்க வேண்டும். அதற்காக, அவ்வப்போது குடிநீர் மற்றும் பானங்களை குடிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


Also Read | Coronavirus: இந்தியாவுக்கு ரஷ்யாவின் அவசரகால உதவிகள் 
 
கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் வழக்குகளை அடுத்து, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (Union Ministry of Health and Family Welfare) வியாழக்கிழமையன்று வீட்டில் தங்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொள்ளும் நோயாளிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது.  


மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைல்களின் நகல் இதோ:



புதிய வழிகாட்டுதல்களின்படி, நோயாளிகள் 8 மணிநேர பயன்பாட்டிற்குப் பிறகு அல்லது அதற்கு முன்னர், முகக்கவசங்கள் ஈரமானால் அவற்றை அகற்றிவிட வேண்டும். தனிமையில் இருப்பவரின் அறைக்கு மற்ற ஒருவர் செல்லும்போது, அவரும், நோயாளியும் N 95 முககவசத்தை அணிவது உசிதமானது என்றும் கூறப்படுகிறது. 


 ஒரு முகமூடியை 1% சோடியம் ஹைப்போகுளோரைட் கொண்டு கிருமி நீக்கம் செய்த பின்னரே, பயன்படுத்தப்பட்ட முகக்கவசத்தை  நிராகரிக்க வேண்டும். "போதுமான நீர்ச்சத்து உடலில் இருப்பதை உறுதி செய்யவேண்டும். நோயாளி நன்கு ஓய்வெடுக்க வேண்டும் மற்றும் நிறைய திரவங்களை குடிக்க வேண்டும்" என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.  


Also Read | 18+ கோவிட் தடுப்பூசிகளுக்கு சிக்கல்; கையறு நிலையில் மருத்துவமனைகள்! 


இந்தியாவில் கொரோனா பரவல் மிகவும் தீவிர நிலையை எட்டியுல்ளது. ஒரே நாளில் 3,79,257 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை 1,83,76,524 ஆக உயர்ந்துள்ளது. குணமானவர்களைத் தவிர 30 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.  


வியாழக்கிழமை புதுப்பிக்கப்பட்ட மத்திய சுகாதார அமைச்சின் தகவல்களின்படி, கொரோனாவின் இறப்பு எண்ணிக்கை 2,04,832 ஆக அதிகரித்துள்ளது. 


ALSO READ: தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் சுமத்தினால் கூட தவறில்லை: நீதிமன்றம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR