சென்னை: தேர்தல் பேரணிகளில் அரசியல் கட்சிகள் கோவிட் விதிமுறைகளை துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்கத் தவறியதேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் சுமத்தினால்கூட தவறில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளது.
தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கொரோனா பரவலின் தற்போதைய நிலைக்கு தேர்தல் ஆணையம் தான் காரணம், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாவிட்டால் வாக்கு எண்ணிக்கை நிறுத்த நேரிடும். கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது COVID-19 நெறிமுறையை உறுதிப்படுத்த போதுமான வசதிகள் உள்ளதா என்பது குறித்து கவலைகளை எழுப்பியனர் நீதிபதிகள். அங்கு சுமார் 77 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் காலங்களில் COVID-19 நெறிமுறையை மீறும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் செயல்படத் தவறியது குறித்து தனது கவலைகளை தலைமை நீதிபதி பானர்ஜி ஒளிபரப்பினார்.
"இன்றைய நிலைமைக்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு. நீதிமன்றத்தின் ஒவ்வொரு உத்தரவையும் மீறி அரசியல் கட்சிகள் பேரணிகளை நடத்தியதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய வேண்டும்" என தலைமை நீதிபதி கூறினார்.
தேர்தல் ஆணையத்தின் ஆலோசகர் மற்றும் வழக்கறிஞரான நிரஞ்சன் ராஜகோபாலன், வாக்கு எண்ணும் மையங்களில் COVID-19 பாதுகாப்பு விதிமுறைகளை பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறி அறிக்கையை சமர்ப்பித்தார்.
நாட்டில் உள்ள மற்ற சில மாநிலங்களை விட தமிழகம் சிறப்பாக செயல்பட்டாலும் கூட, இன்று மோசமான நிலைமை மற்றும் கோவிட் -19 தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, வாகு எண்ணிக்கையின் போது ஒரு சரியான திட்டமிடல் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியது.
இந்த விவகாரம் குறித்து மே 30 அன்று மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்படும். அப்போது நீதிமன்றம் நிலைமையை மறுஆய்வு செய்யும் எனவும் நீத்பதிகள் தெரிவித்தனர்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR