இந்த மூலிகைகளை சமைச்சு சாப்பிட்டா வேற லெவல்! அப்படியே சாப்பிட்டா ஆரோக்கியம் உறுதி
Herbs For Health: சில மூலிகைகளை பச்சையாகவே மட்டும் சாப்பிட வேண்டும் சமைத்து சாப்பிடக்கூடாது. ஆனால் சிலவற்றை சமைத்தும் சாப்பிடலாம், அப்படியே உண்டாலும் நல்ல பலன்களைத் தரும்
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இலைகள்: நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இலைகள் மற்றும் மூலிகைகள் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாதவை. சமைத்து சாப்பிடும் சில இலைகள், பச்சையாக அதாவது அப்படியே சாப்பிட்டாலும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நமக்கு சுலபமாக கிடைக்கும் மூலிகைகளை நாம் மூலிகை என்றே அறியாமல் இருக்கிறோம். ஆனால், இவற்றில் சில பச்சையாகவே மட்டும் சாப்பிட வேண்டும் சமைத்து சாப்பிடக்கூடாது என்றாலும், சில மூலிகைகளை சமைத்தும் சாப்பிடலாம், அப்படியே உண்டாலும் நல்ல பலன்களைத் தரும்.
சமைத்தும் பச்சையாகவும் உண்ணக்கூடிய மூலிகைகள்
கறிவேப்பிலை
"கறிவேப்பிலையை எடுத்து வைத்து சாப்பிடு” என்று கூறுவார்கள். அதன் உண்மையான காரணம், சாப்பிட்டு முடித்தவுடன் கடைசியாக அதை உட்கொள்ள வேண்டும். அது உணவு செரிமானத்திற்குப் பெரிதும் உதவும். கறிவேப்பிலையை சமையலில் சேர்ப்பது போலவே, கறிவேப்பிலையை துவையலாகவும் செய்து சாப்பிடலாம். இரும்புச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் ஊட்டச்சத்து மிகுந்த இலை.
கறிவேப்பிலை சட்னி, கறிவேப்பிலை ஜூஸ் என பல விதங்களில் கறிவேப்பிலையை பயன்படுத்தலாம். அதுமட்டுமல்ல, தலை முடி வளர்ச்சிக்கு எண்ணெய் தயாரித்து பயன்படுத்திவந்தால், முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். ரத்த விருத்திக்கும் கறிவேப்பிலை பயன்படுகிறது.
புதினா
ஒவ்வாமை, நாசியழற்சி, சுவாசத்தில் துர்நாற்றம், சளி, பல் வலி, செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்சனை, மாதவிடாய் பிடிப்புகள், ஒற்றைத்தலைவலி, நோய்த் தொற்று என பல பிரச்சனைகளை போக்கும் புதினாவை பச்சையாகவும் உண்ணலாம். சமையலிலும் பயன்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
மேலும் படிக்க | எலும்புகளை வலுவாக்கும் வைட்டமின் எது? ரத்தத்தில் கால்சியம் இருக்கவும் இது அவசியம்!
கொத்தமல்லி
கொத்தமல்லி இலைகளில் விட்டமின் ஏ, சி என எல்லா விட்டமின்களும் உள்ளன. கொத்தமல்லி இலைகளில் நார்ச்சத்துக்கள், இரும்புச் சத்து, மாங்கனீஸ், கால்சியம், விட்டமின் கே, பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. கொத்தமல்லியை சமையலில் சேர்ப்பது போலவே, துவையலாகவும் செய்து சாப்பிடலாம். அனைத்து உணவுகளிலும் கொத்தமல்லி சேர்த்து பயன்படுத்துவது அதன் ஊட்டச்சத்துக்களை நாம் பெற உதவுகிறது.
கொத்தமல்லி இலைகளில் 11 அத்தியாவசிய எண்ணெய்கள் காணப்படுகின்றன. இதில் நிறைவுற்ற கொழுப்பு மிகக் குறைந்த அளவே உள்ளது. லினோலிக் அமிலம் இருக்கும் கொத்தமல்லி, ஏராளமான சுகாதார நன்மைகளைத் தருகிறது.
துளசி
நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்கப்படுத்தும் துளசி, இந்தியாவில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது. துளசியில் உள்ள துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி இரண்டுமே தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகின்றன. துளசி டீயை தினமும் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ஜீரண உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் துளசி, நச்சுகளை வெளியேற்றி உடல் எடையை குறைக்கிறது. உடலில் வளர்சிதை மாற்ற விகிதத்தை துரிதப்படுத்துகிறது. அற்புதமான மருத்துவத் திறன்களுக்கு பெயர் பெற்ற துளசி, உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகையாகும்.
மேலும் படிக்க | 30 நாள் நோ சுகர் சேலஞ்சுக்கு ரெடியா? இதனால் கிடைக்கும் வியக்க வைக்கும் நன்மைகள்
வேப்பிலை
தினமும் வேப்பிலையை உட்கொண்டால், அது உடலிலுள்ள புற்றுநோய் செல்களின் எண்ணிக்கையை ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் வைத்திருக்கும். வேப்பிலையின் சுவை கசப்பு என்பதால், பொதுவாக யாரும் இதை உண்பதில்லை. மேலும், வேப்பிலையை சமையலில் சேர்க்க மாட்டோம். ஆனால், வேப்பிலையை பச்சடி போன்ற ஒரு சில உணவுகளில் மிகவும் குறைவான அளவே சேர்ப்போம்.
செல்களின் வளர்சிதை மாற்றத்தில் உருவாகும் free radicals எனப்படும் சமனில்லா மூலக்கூறுகளைத் தடுப்பதற்கான பண்புகளைக் (free radical scavenging properties) கொண்டுள்ள வேப்பிலை, புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதிலும் பயனுள்ளதாக இருக்கிறது. அதேபோல அலர்ஜி எதிர்ப்பு அம்சமாகவும் வேம்பு பங்களிக்கிறது.
நீங்கள் தினமும் வேப்பிலையை உட்கொண்டால், அது உடலிலுள்ள புற்றுநோய் செல்களின் எண்ணிக்கையை ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் வைத்திருக்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக உண்ணக்கூடாது என்பதை கவனத்தில் வைக்கவும்.
வெற்றிலை
வயிறு சம்மந்தமான-ஜீரண மண்டல கோளாறுகளுக்கு நல்ல தீர்வு கொடுக்கும் வெற்றிலை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைக்கும் நல்ல மருந்தாக உள்ளது. நுரையீரல் சம்பந்தமான நோய்களையும் வெற்றிலை சீர் செய்யும். வாய் துர்நாற்றம், மலச்சிக்கல், வயிறு பொருமல் மற்றும் மலக்கட்டு என பல நோய்களை போக்கும் அருமருந்து மூலிகை வெற்றிலை.
மேலும் படிக்க | Strong Bones: எலும்புகளை இரும்பைப் போல் வஜ்ரமாக்கும் கால்சியம் நிறைந்த உலர் பழங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ