LDL கொலஸ்ட்ராலை எரித்து... இதயத்தை காக்கும் சியா விதைகள்..!!
உடலில் HDL என்னும் நல்ல கொல்ஸ்ட்ரால் குறைந்து LDL என்னும் கெட்ட கொல்ஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, மாரடைப்பு ஏற்படும் அபாயம் பெருமளவு அதிகரிக்கிறது.
கடந்த சில வருடங்களாக கொலஸ்ட்ரால் பிரச்சனை ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இறைய வாழ்க்கை முறை காரணமாக, இளைஞர்கள் கூட மாரடைப்பினால் இறக்கும் சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்து விட்டன. உடலில் HDL என்னும் நல்ல கொல்ஸ்ட்ரால் குறைந்து LDL என்னும் கெட்ட கொல்ஸ்ட்ரால் அதிகரிக்கும் போது இந்த நிலை ஏற்படுகிறது.
நரம்புகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, பிபி மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயம் பெருமளவு அதிகரிக்கும். கெட்ட கொலஸ்ட்ரால் காரணமாக, இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருக்கும். இதனால், மாரடைப்பு அபாயம் அதிகரிக்கிறது.எனவே, கெட்ட கொலஸ்ட்ராலை அழித்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிப்பது மிகவும் அவசியம்.
இதய நரம்புகள் மற்றும் தமனிகளில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை உறிஞ்சி அவற்றுடன் வெளியேற்றி, நல்ல கொழுப்பை அதிகரிது இதய ஆரோக்கியத்தை (Heart Health) மேம்படுத்த சியா விதைகள் உதவும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
சியா விதைகள்
திருநீற்றுப் பச்சிலை விதைகள் என்று சொல்லக் கூடிய சியா விதைகள், மிகச் சிறியதாக கருப்பு நிறத்தில் இருக்கும். இனிப்பு சுவை இந்த விதைகள் மூலம் நமக்கு கிடைக்கக் கூடிய பலன்கள் ஏராளம். சியா விதைகளை தண்ணீரில் ஊற வைத்தால் அதில் கரையத்தக்க நார்ச்சத்து உருவாகும். எனவே இவை கொல்ஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்டவை. மேலும், ஊற வைத்து உட்கொள்ளும் போது இவை செரிமானத்தை மேம்படுத்தி, வயிறு உப்புசம், வாயு போன்ற குடல் பிரச்சினைகளை போக்கும். மேலும் சியா விதைகளை உட்கொண்டால் பசி உணர்வு கட்டுப்படும். எனவே உடல் எடையை குறைக்கவும் உதவியாக இருக்கும்.
நார்ச்சத்து நிறைந்த சியா விதைகள்
சியா விதைகளை பாலில் ஊறவைப்பது அதில் உள்ள நார்ச்சத்தின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இந்த பாலை சாப்பிடுவதன் மூலம் இரத்த நாளங்கள் சுத்தமாகும். இது உங்கள் இரத்த நாளங்களை சுத்தப்படுத்தும் ஒரு ஸ்க்ரப் போல செயல்படுகிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனையை போக்கி, இதய நோய் அபாயத்தை தடுக்கிறது.
மேலும் படிக்க | சுகர் லெவலை சூப்பரா கட்டுப்படுத்தும் சூப்பர் உணவுகள்: நோட் பண்ணுங்க மக்களே
நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் சியா விதைகள்
சியா விதைகளை பாலுடன் உட்கொள்வது, கெட்ட கொல்ஸ்ட்ராலில் அளவை குறைப்பதோடு, உங்கள் உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. கூடுதலாக, சியா விதைகளில் உள்ள ஒமேகா -3 என்னும் ஆரோக்கியமான கொழுப்புகள் இரத்த நாளங்கள் மற்றும் அவற்றின் சுவர்களை வலுப்படுத்தி ஆரோக்கியத்தை பராமரிக்க நன்மை பயக்கும்.
ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்கும் சியா விதைகள்
சியா விதைகள், இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் ட்ரைகிளிசரைடுகள் அளவையும் குறைக்க உதவுகின்றன. இரத்த நாளங்களை சுத்தப்படுத்துவதுடன், அவை கொழுப்பையும் தங்களுக்குள் உறிஞ்சுகின்றன. சியா விதைகளில் உள்ள நார்ச்சத்து முதன்மையாக கரையக்கூடிய நார்ச்சத்து. இது ஒரு ஒட்டும் அமைப்பை உருவாக்குகிறது. இந்த நார்ச்சத்து LDL கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளை உறிஞ்சி வெளியேற்றி, அதன் அளவைக் குறைக்க உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | கல்லீரல் பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகள் இவைதான்.. உஷார் மக்களே!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ