Side Effects of Chia Seeds: திருநீற்றுப் பச்சிலை விதைகள் எனப்படும் சியா விதைகள் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் அற்புத உணவு. அளவில் மிகச் சிறியதாக கருப்பு நிறத்தில் இருக்கும் இந்த விதைகள், இனிப்பு சுவை கொண்டவை. ஏராளமான ஊட்டசத்துக்களையும் ஆரோக்கிய நன்மைகளையும் கொண்ட இந்த விதைகளில் கரையும் நார்சத்து அதிகம் உள்ளது, இதனால், கொழுப்பையும் கொல்ஸ்ட்ராலை எரித்து, உடல் பருமனை குறைக்கும் ஆற்றல் கொண்டவை. இதனை ஊற வைத்து உட்கொள்வதினால், செரிமான ஆரோக்கியம் மேம்படும். வயிறு உப்புசம், வாயு போன்ற குடல் பிரச்சினைகளை குணமாக்கும் அருமருந்து சியா விதைகள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சியா விதைகளில் காணப்படும் அனைத்து கூறுகளும் அதிக அளவில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆனால், இந்த விதைகள் சிலருக்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பிட்ட உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளுடன் போராடுபவர்கள் சியா விதைகளை சாப்பிடக்கூடாது. இதனால் பிரச்சனை அதிகரிக்கும். அதோடு கர்ப்பிணி பெண்களும் சியா விதைகளை மிகவும் எச்சரிக்கையோடு உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். சியா விதைகளில் உள்ள சில பக்க விளைவுகள் (Health Tips) பற்றி அறிந்து கொள்வோம்.


செரிமான பிரச்சனைகள்


சியா விதைகள் செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது, ஆனால், நீங்கள் வயிற்று வலி, வாயு, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், சியா விதைகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் அதிக நார்சத்து உள்ளது. அளவிற்கு அதிகமான நார்சத்து செரிமான பிரச்சனைகளை அதிகரிக்கும்


குறைந்த இரத்த அழுத்தம்


குறைந்த இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், சியா விதைகளை அதிக அளவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். சியா விதைகளில் காணப்படும் ஒமேகா -3 என்னும் கொழுப்பு அமிலங்கள் இரத்தத்தை மெலிதாக்கி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. எனவே ரத்த அழுத்தம் அதிக அளவில் குறைய வாய்ப்புள்ளது.


மேலும் படிக்க | கீல்வாதம், மூட்டு வலி, யூரிக் அமிலம் நோய்களுக்கு சமையலறை டப்பாவில் இருக்கும் அருமருந்து


சிறுநீரக நோய்


சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக சியா விதைகளை உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். சியா விதைகளில் நல்ல அளவு ஆக்சலேட்டுகள் காணப்படுகின்றன. இது சிறுநீரக கற்கள் அபாயத்தை அதிகரிக்கும்.


கர்ப்பிணிகள்


சியா விதைகள் கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் சியா விதைகளைத் தவிர்ப்பது நல்லது. சியா விதைகளுக்கு ஒவ்வாமை உள்ளவர்களும் இந்த விதைகளை உட்கொள்ளக்கூடாது. ஒட்டுமொத்தமாக, சியா விதைகளை உங்கள் டயட் திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கு முன் மருத்துவரை அணுகுவது புத்திசாலித்தனம். அதன் மூலம் உங்களுக்கு சியா விதைகள் எந்த அளவிற்கு ஒத்துக் கொள்ளும் என்பதௌ அறிந்து கொண்டு, அதற்கு ஏற்ற்றபடி உட்கொள்ளலாம்.


நாள் ஒன்றுக்கும் எவ்வளவு சியா விதை சாப்பிடலாம்?


சியா விதைகளில் அதிக அளவிலான நார்ச்சத்து மட்டுமல்லாது புரதம், பொட்டாசியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மெக்னீசியம், கால்சியம் போன்ற பல வைட்டமின்களும் மற்றும் தாதுக்களும் காணப்படுகின்றன. எனினும், சியா விதைகளை அளவோடு சாப்பிட வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். நாள் ஒன்றுக்கு சியா விதைகளை 1-2 தேக்கரண்டி மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். . சியா விதைகளை பாலில் ஊறவைப்பது அதில் உள்ள நார்ச்சத்தின் அளவை அதிகரிக்க உதவுகிறது.  அதோடு, அதனை ஊற வைத்து உண்பதே சரியான வழிமுறை. இதனால் செரிமானம் எளிதாகும் என்பதோடு, நார் சத்தின் அளவும் அதிகரிக்கும். இது பசியை கட்டுப்படுத்துவதன் மூலம் உடல் பருமனை குறைப்பதை எளிதாக்கும்.


பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | வெயிட் லாஸ் முதல் டீடாக்ஸ் வரை... நூறு நோய்களுக்கு மருந்தாகும் நெல்லிக்காய்... தினமும் சாப்பிடுங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ