லியோனல் மெஸ்ஸியைப் போல  உடற்தகுதியை அடைவதோ அல்லது உடல் எடையைக் குறைப்பதோ எளிதானது அல்ல, இதற்காக ஜிம்மில் மணிக்கணக்கில் வியர்க்க வேண்டியிருக்கும், இருந்தாலும் உங்கள் தினசரி உணவில் சில ஆரோக்கியமான விஷயங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் உடற்தகுதியை வளர்க்க சிறந்த வழி. உடல் எடையை குறைக்க கொண்டைக்கடலையை இப்படி சாப்பிடுங்கள், லியோனல் மெஸ்ஸி போல் உடல் கட்டுக்கோப்பாக மாறும்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடற்தகுதி என்று வரும்போது, ​​கால்பந்து வீரர்களிடமிருந்து உத்வேகம் பெறுவதும் முக்கியமான விஷயமாகும். உடல் ஃபிட்டாக இல்லை என்றால் 90 நிமிடங்கள் தொடர்ந்து ஓடுவது கடினம். அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி, ஃபிஃபா உலகக் கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார்.


சொல்வது எளிதென்றாலும், வெல்வது அவ்வளவு எளிதல்ல, அதற்கு திறமையும், கட்டுக்கோப்பான உடலும் தேவை. உங்களுக்கும் கட்டுக்கோப்பான உடல் தேவையென்றால், உடற்பயிற்சியுடன், ஆரோக்கியமான உணவையும் எடுத்துக் கொள்ள வேண்டும், அப்போதுதான் உங்கள் எடையை பராமரிக்க முடியும்.


மேலும் படிக்க | Diabetic Diet Fruits: நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்கள்!


கருப்பு சுண்டலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்


புரதம், நார்ச்சத்து, ஃபோலேட், தாமிரம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து என பல வகையான ஊட்டச்சத்துக்கள் இருக்கும் கருப்பு சுண்டல், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது.


எடை இழப்புக்கு கருப்புச் சுண்டல் ஏன்?


கருப்பு சுண்டலில் அதிக அளவு புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது, அதனால்தான் இது தொப்பையை குறைத்து உடலை வலுப்படுத்துகிறது. நமக்குத் தேவையான தினசரி புரத தேவை பூர்த்தி செய்கிறது.


கருப்பு சுண்டலை சாப்பிடுபவர்களின் இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைட்டின் அளவு படிப்படியாக குறையத் தொடங்குகிறது, இது உடல் பருமனைக் குறைப்பது மட்டுமல்லாமல் இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது.


மேலும் படிக்க | 30 வயதிற்குள் நரைமுடியா? கவலைப்பட வேண்டாம்


கொண்டைக் கடலையை எப்படி சாப்பிடுவது நல்லது?


கொண்டைக் கடலையை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் அல்லது பகலில் எந்த நேரத்திலும் சாப்பிடலாம், இது ஆரோக்கியமானதாக இருக்கும். அதிலும் முளைகட்டிய கொண்டைக் கடலை இன்னும் நல்லது. அத்துடன் வெங்காயம், கருப்பு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.


அதோடு, கருப்பு சுண்டலை வறுத்து, பசிக்கும்போது சாப்பிட்டால், உடல் பருமன் கண்டிப்பாக குறையும். அதிக எண்ணெயில் சமைத்த கொண்டைக் கடலையை சாப்பிட்டால் உடல் எடைக் குறையாது.  


(பொறுப்புத் துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொது அறிவை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | மது குடிக்கலாமா அல்லது குடிக்கக் கூடாதா? நிபுணர்கள் பதில்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ