நோய்களை ஓட விரட்டும் இந்த ‘மேஜிக்’ மசாலாக்கள் தினசரி உணவில் இருக்கட்டும்!

இந்திய சமையலறையில் பயன்படுத்தப்படும் சில மசாலா உணவுகள் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் அள்ளி வழங்குகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 2, 2022, 05:16 PM IST
  • சில மசாலா உணவுகள் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் அள்ளி வழங்குகிறது.
  • மஞ்சளில் குர்குமின் என்ற செயலில் உள்ள கலவை காணப்படுகிறது.
  • மசாலாக்களை தொடர்ந்து உட்கொள்வது நமது ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
நோய்களை ஓட விரட்டும் இந்த ‘மேஜிக்’ மசாலாக்கள் தினசரி உணவில் இருக்கட்டும்! title=

இந்திய சமையலறையில் காணப்படும் குறிப்பிட்ட 5 மசாலாப் பொருட்கள் அளப்பறிய மருத்துவ பயன்களை கொடுக்கக் கூடியது. இது சிறுநீரகம் முதல் கல்லீரல் தொடர்பான நோய்கள் மட்டுமல்லாது, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இந்திய சமையலறையில் பயன்படுத்தப்படும் சில மசாலா உணவுகள் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் அள்ளி வழங்குகிறது. இந்த மசாலாக்களை தொடர்ந்து உட்கொள்வது நமது ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

மஞ்சள்

மஞ்சளில் குர்குமின் என்ற செயலில் உள்ள கலவை காணப்படுகிறது. இது புற்று நோய் உட்பட பல கடுமையான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. மேலும், கல்லீரல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் மஞ்சள் மிகவும் நன்மை பயக்கும். இதுபோன்ற பல சிறப்பு ஆக்ஸிஜனேற்றங்கள் மஞ்சளில் காணப்படுகின்றன. இது கல்லீரல் பாதிப்பை தடுக்கிறது.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை ஆரோக்கியமான மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். இலவங்கப்பட்டையில் உள்ள பல சேர்மங்கள் ஃப்ரீ ரேடிக்கல்களைக் கட்டுப்படுத்த வேலை செய்கிறது. இலவங்கப்பட்டை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் புற்றுநோய்க்கு எதிரானது.

மேலும் படிக்க | முட்டை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா... நிபுணர்கள் கூறுவது என்ன..!!

ஓமம்

ஓமம் சிறுநீரகத்திற்கு மிகவும் நல்லது. இது ஒரு இயற்கை டையூரிடிக் ஆக செயல்படுகிறது. இது அதிகப்படியான திரவத்தை உடலில் இருந்து வெளியேற்றுகிறது மற்றும் எலக்ட்ரோலைட் அளவையும் பராமரிக்கிறது.

ஏலக்காய்

ஏலக்காய் உணவுகளுக்கு சுவையையும் நறுமணத்தையும் சேர்க்கிறது. தவிர, இது பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. குறிப்பாக உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஏலக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், இது உயர்ந்த பிபியைக் குறைப்பதில் மிகவும் திறம்பட செயல்படுகிறது.

வெந்தயம்

இந்தியாவில் பல்வேறு உணவுகளை தயாரிக்க வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. இது சுவையில் கசப்பானது. ஆனால் அதன் சுவை உணவில் மிகவும் சுவையாக இருக்கும். வெந்தய விதைகள் மற்றும் வெந்தய இலைகள் இரண்டும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News