கொலஸ்ட்ரால் இரண்டு வகைப்படும், ஒன்று ஹெச்டிஎல் எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் மற்றொன்று எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் ஆகும்.  எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும்போது நமது உடல் பலவிதமான பாதிப்புகளை சந்திக்கிறது.  உடலில் படியும் கொலஸ்ட்ரால் ஆரம்பத்தில் எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது, ஆனால் அது மெதுவாக உயிருக்கு கூட ஆபத்தை உருவாக்கிவிடும்.  கால்கள் மற்றும் கைகளில் அதிகளவு வலி ஏற்பட்டால் அதனை நாம் அதிக வேலை செய்தது தான் காரணமாக இருக்கும் என்று தவறாக நினைக்கிறோம்.  ஆனால் அது சில சமயங்களில் தவறாக கூட இருந்துவிடுகிறது.  சில ஆய்வகளின்படி இதுபோன்று கால் அல்லது கைகளில் அதிகளவிலான வலி ஏற்படுவது உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்திருப்பதற்கான அறிகுறி என்பது தெரிய வந்துள்ளது.  கால்களில் தொடை, கணுக்கால் என எந்த பகுதியில் வேண்டுமானாலும் இந்த வலி இருக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் இதை மட்டும் செய்தால் போதும் 



ரத்த நாளங்களில் படியும் கொலஸ்ட்ரால் படிவுகள் ரத்த ஓட்டத்தை தடை செய்கிறது, நமது உடலில் ரத்த ஓட்டம் குறைவதால் குறைந்தபட்ச வேலை செய்யும் போதும் கூட  வலி ஏற்படுகிறது, ஆனால் நாம் சில ஓய்வு எடுக்கும்பொழுது அந்த வலி மறைந்துவிடும்.  சிலருக்கு நடைபயிற்சி அல்லது சிறிய உடல் அசைவுகளை செய்தாலும் கால் வலி ஏற்படலாம்.  வலி, தசைப்பிடிப்பு, கால்களில் உணர்வின்மை மற்றும் சோர்வு போன்றவை அடிக்கடி ஏற்படும்.  நீரிழிவு நோய்க்கான அறிகுறி போன்றே அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் பாதங்களில் ஒருவித எரிச்சல் உணர்வு ஏற்படுகிறது மற்றும் கால்களின் தோலில் நிற மாற்றம்,கால்களில் புண்கள், கால்களில் அடிக்கடி நோய்த்தொற்றுகள் ஏற்படுதல் போன்றவையும் அதிக கொலஸ்ட்ராலுக்கான அறிகுறியாகும்.


பொதுவாக கொலஸ்ட்ரால் 200 mg/dL க்கும் குறைவாக இருந்தால் அது சாதாரணமாக கருதப்படுகிறது, 200 முதல் 239 mg/dL வரையிலான கொலஸ்ட்ரால் அளவு எல்லைக்குட்பட்ட கொலஸ்ட்ராலாகக் கருதப்படுகிறது மற்றும் 240 mg/dL க்கு மேல் கொலஸ்ட்ரால் அதிக அளவாக கருதப்படுகிறது.  கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது, புகைபிடித்தல், மது அருந்துவது மற்றும் உடல் பருமனாக இருப்பது போன்றவை உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான காரணமாகும்.  கொலஸ்ட்ராலை குறைக்க உணவு கட்டுப்பாடு மற்றும் தினசரி உடற்பயிற்சி அவசியமாகும், நார்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது கொலஸ்ட்ராலை குறைக்கும்.


மேலும் படிக்க | வைட்டமின் ஈ சத்துக்கும் சரும அழகுக்கும் இவ்வளவு தொடர்பா? வேர்கடலை செய்யும் மாயம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ