கொலஸ்ட்ரால் என்பது உடலுக்கு நல்லது தான், ஆனால் எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் ஆனது உடலில் இருப்பது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு மரணத்தையும் ஏற்படுத்தக்கூடும்.  ஹெச்டிஎல் எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் இருப்பது உங்கள் உடலுக்கு நல்ல பலன்களை கொடுக்கும், கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரித்துவிடாமல் பார்க்க வேண்டியது அவசியம்.  பெரும்பாலும் கெட்ட கொலஸ்ட்ரால் ஆனது புகைபிடித்தல், உடலுழைப்பின்மை மற்றும் உடல் பருமன் போன்றவற்றால் அதிகரிக்கிறது.  எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க மருந்துகள், உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளில் மாற்றம் சிலவற்றை கடைபிடிக்கலாம்.  பெரும்பாலும் உடலில் அதிகளவில் கொலஸ்ட்ரால் இருப்பது வெளிப்படையான அறிகுறிகளை காண்பிக்கவில்லை, ஒருவருக்கு கொலஸ்ட்ரால் இருப்பது ரத்த பரிசோதனையின் மூலம் மட்டுமே தெரிய வருகிறது.  இருப்பினும் சில அறிகுறிகளை நாம் கூர்மையாக கவனிப்பதன் மூலம் நமது உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது என்பதை கண்டறியலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படும்! இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா?



அதிக கொலஸ்ட்ராலை ஏற்படுத்தும் காரணிகள்:


1) மோசமான மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கம்.


2) அதிக எடை அல்லது உடல் பருமன்.


3) அதிகளவில் உடல் செயல்பாடு இல்லாமல் இருத்தல்.


4) புகைபிடித்தல் மற்றும் அதிகமான குடிப்பழக்கம்.


5) வயது காரணமாக கல்லீரல் பலவீனமடைவது அதிக கொலஸ்ட்ராப்களுக்கான காரணமாகும்.


அதிக கொலஸ்ட்ராலை குறைக்கும் வழிகள்:


1) பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களை சாப்பிட வேண்டும் மற்றும் உப்பு அதிகம் சேர்க்காமல் உண்ணவேண்டும்.


2) ஆரோக்கியமான கொழுப்புகளை சாப்பிட்டும், விலங்கு கொழுப்புகளை குறைவாகவும் சாப்பிடவேண்டும்.


3) உடல் எடையை குறைத்து ஆரோக்கியமான எடையில் இருக்க வேண்டும்.


4) புகைபிடிப்பதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.


5) தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.


6) அதிகளவில் மது அருந்துவதை நிறுத்த வேண்டும்.


7) மன அழுத்தமின்றி மகிழ்ச்சியாக இருக்க முயற்சிக்க வேண்டும்.


மேலும் படிக்க | குண்டான பெண்களுக்கு நீண்ட காலம் கோவிட் இருக்கும்! உடல் பருமனை குறைக்க மற்றொரு காரணம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ