Cholesterol Reducing Foods: தற்போது மக்களிடையே கொலஸ்ட்ரால் அதிகரிப்பது பிரச்சனை மிகவும் பொதுவான பிரச்சனையாக மாரி வருகிறது. இது நரம்புகளைத் தடுத்து படிப்படியாக இரத்த ஓட்டத்தை நிறுத்தி விடுகிறது, பின்னர் இது உங்கள் இதயத்தை நேரடியாக பாதிக்கத் தொடங்கி விடுகிறது. எனவே இதனால் இதய நோய்கள் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகிறது. ஆனால் உங்கள் சமையலறையில் உங்கள் நரம்புகளில் இருந்து கொழுப்பை அகற்றக்கூடிய சில பொருட்கள் உள்ளது, இவை கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுவதுடன், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் தவும். இந்நிலையில் எந்தெந்தப் பொருளை உட்கொள்ள வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொலஸ்ட்ராலின் எதிரி பூண்டு (கொழுப்பைக் குறைக்க பூண்டின் நன்மைகள் என்னென்ன)
பூண்டு இந்திய சமையலறையிலும் காணப்படும் ஒரு முக்கிய பொருளாகும். பூண்டு சாப்பிடுவது உங்கள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். ஏனெல் இதில் அல்லிசின் என்ற கலவை உள்ளதால், இவை கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும்.


பூண்டின் நன்மைகள் | Benefits of Garlic:
1. கொலஸ்ட்ராலைக் குறைக்கும்: பூண்டைத் தொடர்ந்து நாம் உட்கொள்வது, 'எல்டிஎல்' கொழுப்பின் (கெட்ட கொழுப்பு) அளவைக் குறைக்கும், அதே நேரத்தில் 'எச்டிஎல்' கொலஸ்ட்ரால் (நல்ல கொழுப்பு) அளவை அதிகரிக்க உதவும்.


2. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்: பூண்டு உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இது இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.


3. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: பூண்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்று நோய் ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது.


4. இரத்தம் உறைவதைத் தடுக்கிறது: பூண்டை உட்கொள்வது இரத்தக் கட்டிகள் உருவாகும் வாய்ப்பைக் குறைக்கிறது, இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது.


மேலும் படிக்க | Garlic Benefits: தினசரி பூண்டு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? தெரியாம போச்சே


பூண்டை எப்படி சாப்பிட வேண்டும்? | How To Consume Garlic?
பூண்டு சாப்பிட பல வழிகள் உள்ளன. பச்சையாக சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. நீங்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 முதல் 2 பூண்டு பற்களை மென்று சாப்பிடலாம். பூண்டை பச்சையாக சாப்பிடுவது கடினமாக இருந்தால், அதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பூண்டை ஊறுகாய், சூப், சட்னி அல்லது பொடி வடிவிலும் உட்கொள்ளலாம்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இந்த பழத்தின் இலை ஒன்று போதும், சுகர் லெவல் பட்டுன்னு குறையும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ