Chennai Doctor Stabbed Latest News Updates: சென்னைக்கு கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் வளாகத்தில் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் (TN Health Minister Ma Subramanian) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் நேற்று காலை நடந்த அசம்பாவிதத்தில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜி தற்போது நலமாக உள்ளார். இன்று காலை அவரை சந்தித்து நலம் விசாரித்தேன்.
இன்று காலை எங்களிடம் எழுந்து உட்கார்ந்து சரளமாக பேசிக் கொண்டிருந்தார். மருத்துவர் பாலாஜிக்கு (Doctor Balaji) அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அவரது மகனும் நன்றாக அறிவார் அவரும் ஒரு மருத்துவர். மருத்துவர் பாலாஜிக்கு ஏற்கனவே பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளதால் அதனை ஆய்வு செய்து மிகச் சிறப்பாக செயல்படுகிறது என்று அறிவித்திருக்கிறார்கள். மீண்டும் ஒருமுறை அதன் செயல்பாடுகளை மறு ஆய்வு செய்வதற்கு அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் வருகை தந்துள்ளனர்.
தனி அறைக்கு மாறும் மருத்துவர் பாலாஜி
இன்று மதியத்திற்கு பிறகு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள மருத்துவர் பாலாஜி, தனி அறைக்கு மாற்றப்பட உள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அனைத்து வசதிகளும் அந்த தனி அறையில் உள்ளது. அவரது வேண்டுகோளுக்கு இணங்க அவரை தனி அறைக்கு மாற்றுகிறோம்.
கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவர் திரு.பாலாஜி அவர்கள் நலமுடன் உள்ளார், அவரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கப்பட்டது. #Masubramanian #TNHealthminister #DMK4TN pic.twitter.com/nSLl6E4Qxo
— Subramanian.Ma (@Subramanian_ma) November 14, 2024
மேலும் படிக்க | குடிமகன்களுக்கு குட்நியூஸ்! டாஸ்மாக் கடைகளில் ஜிபே, போன் பே நாளை முதல் அறிமுகம்
புழல் சிறையில் விக்னேஷ்
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விக்னேஷ் என்ற இளைஞரை நேற்று மருத்துவமனையில் உள்ள காவலர்கள், காவல் நிலையத்தில் ஒப்படைத்ததை நீங்கள் அறிவீர்கள். அவர் மீது கடுமையான சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. அவர் மீது அரசு ஊழியர் தாக்குதல், கொலை முயற்சி, வன்முறை செய்தது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மிக முக்கியமான பொருத்தமான வழக்குகள் அவர் மீது வழக்கு பதியப்பட்டு, தற்போது புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றம் அவருக்கு கடுங்காவல் தண்டனை அளித்துள்ளது.
அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்களை வலியுறுத்தி முதலமைச்சர், இவர்களை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று அதற்கான தலைமைச் செயலர் தலைமையில் கூட்டம் நடத்தி, அதற்கான பல்வேறு முடிவுகள் எடுத்தார். அப்படி எடுக்கப்பட்ட முடிவுகளை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் (DME), மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநரகம் (DMS DPH) போன்ற அலுவலர்களுக்கு தகுந்த உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் டேக் கட்டும் முறை
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கையில் கட்டிக் கொள்கின்ற 4 வண்ணங்களில் டேக் (Tag) அறிமுகப்படுத்தி உள்ளோம். இது கடந்த அக்டோபர் மாதம் துவங்கி வருகின்ற நோயாளிகள், நோயாளிகளுடன் வரும் நபர்கள் ஆகியோருக்கு இந்த டேக் வெவ்வேறு வண்ணங்களில் கட்டப்பட்டு வருகிறது. இது தற்போது நடைமுறையில் உள்ளது.
மேலும் படிக்க | மகளிர் உரிமை தொகை இவர்களுக்கெல்லாம் ரூ.1000 கிடைக்காது - லிஸ்ட் இதோ..!
பரிசோதனை ரீதியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் துவங்கப்பட்ட நிலையில், தற்போது படிப்படியாக தமிழ்நாட்டில் இருக்கிற 36 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும், அதேபோல் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் 37 இடங்களிலும், வட்டார அரசு மருத்துவமனைகளில் 320 இடங்களிலும், இந்த டேக் கட்டும் செயலை படிப்படியாக நோயாளர்கள், பார்வையாளர்களிடம் மேற்கொண்டு, அவர்களை கட்டுப்படுத்தும் விதமாக இதை செயல்படுத்த விரும்புகிறார்கள்.
அரசு நடவடிக்கை மீது திருப்தி
நேற்று 11-க்கும் மேற்பட்டோர் அடங்கிய செவிலியர்கள், மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டம் நடைபெற்றது, இவர்களுடன் காவல் துறை உயர் அதிகாரிகள், மருத்துவ துறை அதிகாரிகள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். அவர்கள் அரசு எடுத்த நடவடிக்கைக்கு திருப்தி தெரிவித்தார்கள். தமிழகத்தில் அரசு சேவை பெரிதளவில் பாதிக்கப்படாமல் இருக்க கூடிய நடவடிக்கைகளை அவர்கள் எடுத்துள்ளார்கள்,
தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவமனைகள் எப்படி செயல்படுகிறது என்று கேட்டு அறிந்திருக்கிறேன், எல்லா இடங்களிலும் கவனமாக இருப்பார்கள். இதுபோன்ற மருத்துவர் மீது ஏற்பட்ட பாதிப்பை கவனயீர்ப்பாக பொதுமக்களுக்கு சேர்த்திட வேண்டுமென்ற நோக்கத்தோடு சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர் சங்கங்களுக்கும் அறிவித்துள்ளோம்.
மருத்துவர் பாலாஜியிடம் பேசிய முதல்வர்
நேற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாலாஜியை முதலமைச்சர் ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister MK Stalin) தொலைபேசியில் நலம் விசாரித்தார். அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம், முதலமைச்சரிடம் பேசியபோது, நான் மீண்டும் இதே கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் (Kalaignar Centenary Super Speciality Hospital) பணியாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
அரசு மருத்துவமனைகளின் நுழைவாயிலில் பார்வையாளர்கள் நோயாளிகள் கொண்டு வரும் பொருட்களை மெடல் டிடெக்டர் உள்ளிட்ட ஸ்கேன் கருவிகளை வைத்து சோதனை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நோய் தொற்று எண்ணிக்கை கூடி இருப்பது என்பது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் இப்போது அரசு மருத்துவமனை சிகிச்சையின் மேல் நம்பிக்கை வைத்து அதிகபடியாக வருவதால் இந்த எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிகிறது.
எந்த மருத்துவரும் தனது மனசாட்சிக்கு விரோதமாக நோயாளிகளுக்கு மருத்துவம் செய்ய மாட்டார்கள். பாலாஜி மிக அனுபவம் வாய்ந்த ஒரு மருத்துவர், அவர் மிக சிறப்பாக மருத்துவம் செய்யக்கூடியவர்" என்றார்.
மேலும் படிக்க | மருத்துவரை தாக்கிவிட்டு தப்பிய விக்னேஷ் பிடிபட்ட காட்சி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ