கிராம்பு செய்யும் மேஜிக்... காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்க - அப்புறம் பாருங்க..!
Cloves | கிராம்பை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கல்லீரல் பாதுகாப்பு மேம்படுவதுடன், வாய் துர்நாற்றம் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
Cloves Health Benefits Tamil | சமையலறையில் இருக்கும் கிராம்பு வாசம் உங்களை ஈர்க்காமல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. அந்த கிராம்பில் ஏராளமான ஆயுர்வேத மருத்துவ நன்மைகள் இருக்கின்றன. வெறும் வாயிலேயே போட்டு அதனை மென்று சாப்பிடலாம். சுவையாக இருப்பது மட்டுமின்றி ஊட்டச்சத்துகளையும் நிரம்ப கொண்டிருக்கிறது கிராம்பு. இதை ஆயுர்வேதத்தின் பொக்கிஷம் நிறைந்ததாக கருதப்படுகிறது. கிராம்புகளை உட்கொள்ளும்போது உடலுக்கு தேவையான வைட்டமின்கள், நார்ச்சத்து, புரதம், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, கார்போஹைட்ரேட் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் கிடைக்கும். குறிப்பாக, நீங்கள் தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் கிராம்புகளை மென்று சாப்பிட்டால், உங்கள் ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.
வெறும் வயிற்றில் கிராம்புகளை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
1. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
கொரோனா வைரஸ் தொற்றுநோய் வந்த பிறகு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. இதனால் எந்த வகையான தொற்றுநோயையும் தவிர்க்க முடியும், மாறிவரும் வானிலை, மழை மற்றும் குளிர்காலத்தில் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. தினமும் காலையில் எழுந்தவுடன் கிராம்புகளை மென்று சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
2. கல்லீரல் பாதுகாப்பு
கல்லீரல் நமது உடலின் மிக முக்கியமான உறுப்பு. ஏனெனில் அது பல செயல்பாடுகளைச் செய்கிறது. உணவு செரிமானம் முதல் இதயம் செயல்பாடு, முளை இயக்கம் என அனைத்துக்கும் அடிப்படை காரணியாகவும் திகழ்வது கல்லீரல் தான். எனவே இந்த உறுப்பின் ஆரோக்கியத்தை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். தன்னை தானே சுவீகரித்துக் கொள்ளும் இயல்புடையது கல்லீரல் என்றாலும், கொழுப்பு அதற்கு எதிரி. கல்லீரலே உடலுக்கு தேவையான ஆரோக்கியமான கொழுப்பை சுரக்கிறது என்றாலும், உண்ணும் உணவு மூலம் உருவாகும் கெட்ட கொழுப்பு கல்லீரல் இயக்கத்தை பாதித்து அதன் செயல்பாட்டை மோசமாக்குகிறது. இதனை தவிர்க்க உணவு முறையில் அதீத கவனம் செலுத்த வேண்டும். கிராம்பு சாப்பிடுவதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.
3. வாய் துர்நாற்றம் போகும்
கிராம்பு ஒரு இயற்கையான வாய் ப்ரெஷ்னராக பயன்படுத்தப்படலாம், சில சமயங்களில் வாயை சுத்தம் செய்யாததால், வாய் துர்நாற்றம் வர ஆரம்பிக்கிறது, இதன் காரணமாக சுற்றி இருப்பவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும். கிராம்புகளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன, தினமும் காலையில் அதை மென்று சாப்பிட்டால் வாயில் உள்ள கிருமிகள் அழிந்து சுவாசம் புத்துணர்ச்சி பெறும்.
4. பல்வலி
பல் வலிக்கு சிறந்த நிவாரணி கிராம்பு. சிலர் பல் வலிக்கு மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். இது ஆரோக்கியமான உடலுக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் ஆயுர்வேத மருத்துவத்தை நாடுவது சிறந்தது. அதாவது வீட்டின் சமையலறையில் இருக்கும் கிராம்புகளை எடுத்து சாப்பிட்டாலே பல் வலிக்கு நிவாரணம் கிடைக்கும். பல் வலிக்கும்போது உடனடியாக ஒரு கிராம்பு துண்டை எடுத்து வலிக்கும் பல் மீது வைத்து அழுத்தவும். இது உடனே பல் வலிக்கு காரணமான கெட்ட பாக்டீரியாவை திறம்பட தாக்கி அழிக்க தொடங்கும். இதனால் பல்வலி குணமாகும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Brain Stroke: மூளை பக்கவாதம்... அறிகுறிகளும்... வராமல் தடுக்க செய்ய வேண்டியவையும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ