Brain Stroke: மூளை பக்கவாதம்... அறிகுறிகளும்... வராமல் தடுக்க செய்ய வேண்டியவையும்!

மூளையில் உள்ள இரத்த குழாய்கள்ளில் அடைபடும் போதோ அல்லது அவை வெடிக்கும் போதோ, மூளை பக்கவாதம் ஏற்படுகிறது. மூளை பக்கவாதம் பாதிப்பு நீண்ட கால இயலாமையை ஏற்படுத்தும். சில அறிகுறிகள் மூலம் அதனை கண்டறிந்து எச்சரிக்கையாக இருந்தால் வராமல் தடுக்கலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 6, 2024, 10:10 AM IST
  • மூளை பக்கவாதம் வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய சில எச்சரிக்கை நடவடிக்கைகள்.
  • ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான மக்கள் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
  • இரத்த ஓட்டம் சீராக இருந்தால் தான், உடலின் இயக்கம் சீராக இருக்கும்.
Brain Stroke: மூளை பக்கவாதம்...  அறிகுறிகளும்... வராமல் தடுக்க செய்ய வேண்டியவையும்! title=

Symptoms of Brain Stroke: மூளையில் உள்ள இரத்த குழாய்கள்ளில் அடைபடும் போதோ அல்லது அவை வெடிக்கும் போதோ, மூளை பக்கவாதம் ஏற்படுகிறது. மூளை பக்கவாதம் பாதிப்பு நீண்ட கால இயலாமையை ஏற்படுத்தும். சில அறிகுறிகள் மூலம் அதனை கண்டறிந்து எச்சரிக்கையாக இருந்தால் வராமல் தடுக்கலாம்.

மூளையில் உள்ள இரத்தக் குழாய்களில் அடைப்போ அல்லது வெடிப்போ ஏற்பட்டால், இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, மூளையில் உள்ள நியூரான்கள் இறந்துவிடும். மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம் என்னும் ஹைபர் டென்ஷன் உள்ளிட்ட பிற காரணங்களால் மூளைக்கு இரத்த விநியோகம் தடைபட்டு மூளையில் பாதிப்பு ஏற்படுகிறது.

மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கான அறிகுறிகள்

பார்வைக் கோளாறு

மூளை பக்கவாதம் கண்களின் பார்வை திறனை பாதிக்கிறது. சில நேரங்களில்  பார்வை மிகவும் பிரகாசமாகவும், சில சமயங்களில் மங்கலாகத் தோன்றலாம். மூளையில் இருந்து கண்ணிற்கு தகவல்களைச் சுமந்து செல்லும் நரம்பு சேதமடைவதால் இவ்வாறு ஏற்படலாம்.

முகத்தின் ஒரு பகுதியில் பாதிப்பு

மூளை பக்கவாதம் ஏற்படுவதன் அறிகுறியாக வாய் அல்லது கண்கள் அடிக்கடி ஒரு பக்கமாக இழுத்துக் கொள்வது போல் இருக்கும். முகத்தின் ஒரு பகுதி இயல்பான நிலைக்கு மாறாக இருக்கலாம். இந்த அறிகுறி இருந்தால், அலட்சியம் காட்ட வேண்டாம். 

அதீத சோர்வு

இரத்த ஓட்டம் சீராக இருந்தால் தான், உடலின் இயக்கம் சீராக இருக்கும். அது தடைபடும் போது, உடலில் ஆற்றல் மட்டம் மிகவும் குறைவாக இருக்கும். சில சமயம் உடம்பு முழுவதும் மரத்துப் போனது போன்ற உணர்வு ஏற்படும். உணர்ச்சியற்ற நிலை ஏற்படுவது, மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

மேலும் படிக்க | கொலஸ்ட்ராலை குறைக்க... பெண்கள் உண்ண வேண்டிய 7 உணவுகள்!

பேச்சில் தடுமாற்றம்

பேச்சில் தடுமாற்றம் இருந்தாலோ அல்லது பேச முடியாமல் வாய் குளறுகிறது என்றாலோ, அலட்சியம் வேண்டாம். மூளையின் செயல்பாடு பாதித்தால்,  நாக்கில் உள்ள தசைகள் செயலிழந்துவிடும். 

நெஞ்சு வலி

சில நேரங்களில் மார்பில் கடுமையான வலி  இருக்கலாம். இது வாயு கோளாறு அல்லது அஜீரணம் என்று அலட்சியபடுத்தாமல் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்ளவதால், கடுமையான பிரச்சனைகளை தவிர்க்கலாம். 

ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான மக்கள் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர், ஆனால் இதனை வராமல் தடுக்க முடியும் என்பது         ஆறுதல் தரும் செய்தியாகும். அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (AHA) மற்றும் அமெரிக்கன் ஸ்ட்ரோக் அசோசியேஷன் (ASA) ஆகியவை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன. இது வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் சில நடவடிக்கைகள் மூலம் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்கான வழிகளைக் கோடிட்டுக் காட்டுகிறது.

மூளை பக்கவாதம் வராமல் தடுக்க செய்ய வேண்டியவை

பரிசோதனை மற்றும் ஆபத்து காரணி கண்டறிதல்

இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இரத்த சர்க்கரை மற்றும் உடல் பருமன் போன்ற பக்கவாதத்தின் ஆபத்து காரணிகளை தவறாமல் கண்காணிக்க வேண்டும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள், இதனால் அவை தீவிரமடைவதற்கு முன்பு அவை கட்டுப்படுத்தப்படலாம். குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் அல்லது கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசித்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிப்பதன் மூலம் இந்த ஆபத்தை குறைக்கலாம்.

ஆரோக்கியமான உணவுமுறை

புதிய பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் (ஆலிவ் எண்ணெய் போன்றவை) அடங்கிய சமச்சீரான உணவு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. சிவப்பு இறைச்சி, சர்க்கரை நிறைந்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களை உட்கொள்வதைக் குறைப்பதும் அவசியம். ஏனெனில் இவை மூளை மற்றும் இதய ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கக் கூடியவை

வழக்கமான உடற்பயிற்சி

உடல் உழைப்பின்மை பக்கவாதத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும். ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான தீவிர உடற்பயிற்சி அல்லது 75 நிமிடங்கள் அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சி செய்வது நல்லது. படிக்கட்டுகளில் ஏறுவது அல்லது தினசரி நடைப்பயிற்சி செய்வது போன்ற எளிய பயிற்சிகள் கூட பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | தினம் 2 நிமிடம் போதும்... 30 நாட்களில் தொப்பையை கரைக்கும் பிளாங்க் பயிற்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News