Weight Loss Tips: இந்த இயற்கை பானத்தின் உதவியுடன் எடை குறைக்கலாம்
How To Burn Belly Fat: உடல் பருமனை கட்டுப்படுத்துவதும், இருக்கும் எடையை பராமரிக்கவும் இந்த ஸ்பெஷல் பயணத்தை தினமும் குடியுங்கள்.
இன்றைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பதே பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது, நடுத்தர வயதினர் மட்டுமின்றி, இளைஞர்களும் இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அத்துடன் நமது வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி கொழுப்பு அதிகரித்தால், அதைக் குறைப்பது என்பது மிகவும் சவாலாகிவிட்டது. அந்த வகையில் உடல் எடையை குறைக்க, நீங்கள் கடுமையான உணவு டயட் மற்றும் கடுமையான உடற்பயிற்சிகளை நாட வேண்டும். கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல டயட்டீஷியன் டாக்டர் ஆயுஷி யாதவ் இதற்கான தீர்வை வழக்கியுள்ளார். அதன்படி இளநீரை தினமும் குடித்து வந்தால், அது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும் என்று தெரிவித்துள்ளார். எனவே இளநீர் உடல் எடையை குறைக்க எவ்வாறு உதவும் என்பதை பார்ப்போம்.
உடல் எடையை குறைக்க இளநீர் உதவுகிறது
இளநீர் நம் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் உடல் எடை அதிகரிப்பதையும் இளநீரின் உதவியுடன் குறைக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம் இளநீநீரில் கலோரிகள் குறைவாக உள்ளது, மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், அமினோ அமிலங்கள், என்சைம்கள், பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், வைட்டமின் சி போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
மேலும் படிக்க | சர்விகல் கழுத்து வலியால் அவதியா? இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் நிவாரணம் அளிக்கும்
இந்த பானம் அற்புதமான புத்துணர்ச்சியை அளிக்கிறது
இளநீரை குடிப்பதன் மூலம் நாம் புத்துணர்ச்சி அடைகிறோம், இது உடலின் ஈரப்பதத்திற்கு உதவுகிறது என்பதால், அதை எந்த நேரத்திலும் குடிக்கலாம். இந்த பானத்தின் உதவியால் நமது சருமமும் நிறைய நன்மைகளைப் பெறுகிறது, ஆனால் எடை இழப்பு பற்றி நாம் பேசுகையில், அதைக் குடிக்க ஒரு சிறப்பு நேரம் உள்ளது, இதன் காரணமாக சிறந்த ரிசல்ட் வெளிவரும்.
தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்
தினசரி உணவில் இளநீரை சேர்த்துக்கொள்வது புத்திசாலித்தனமான முடிவாகக் கருதப்படுகிறது. இது நம் வயிற்றுக்கும் மிகவும் நன்மை பயக்கும், ஏனெனில் இந்த பானத்தில் உள்ள பயோ-ஆக்டிவ் என்சைம்களின் உதவியுடன், செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த முடியும். இளநீர் குடிப்பதால் நீண்ட நேரம் பசி ஏற்படாது, இதன் காரணமாக மக்கள் குறைந்த உணவை உட்கொள்வதோடு படிப்படியாக எடை குறையத் தொடங்குகிறது.
எடை இழப்புக்கு இளநீரை எந்த நேரத்தில் குடிக்க வேண்டும்
இளநீரை ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை குடிக்கலாம், ஆனால் நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், இந்த இயற்கை பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம், இது நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தாமல் பாதுகாக்கும். இது தவிர இளநீரில் உள்ள லாரிக் அமிலம் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Weight Loss Tips: தொப்பையை குறைக்கணுமா? இப்படி செஞ்சி பாருங்க, சட்டுனு குறையும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ