சர்விகல் கழுத்து வலியால் அவதியா? இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் நிவாரணம் அளிக்கும்

Spondylitis Treatment: சர்விகல் கழுத்து வலியால் அவதியில் உள்ளீர்களா? சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் இதை எளிதாக கட்டுப்படுத்தலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 15, 2022, 11:03 AM IST
  • சர்விகல் ஸ்பான்டைலிடிஸ் அதாவது கழுத்து வலிக்கான வைத்தியம்.
  • சர்விகல் வலிக்கு ஆமணக்கு எண்ணெய் அருமருந்தாக பலன் தரும்.
  • ஆயுர்வேதத்திலும் இந்த எண்ணெயில் உள்ள பல பண்புகள் பற்றி கூறப்பட்டுள்ளன.
சர்விகல் கழுத்து வலியால் அவதியா? இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் நிவாரணம் அளிக்கும் title=

சர்விகல் ஸ்பான்டைலிடிஸ் அதாவது கழுத்து வலிக்கான வைத்தியம்: சர்விகல் கழுத்து வலி ஸ்பான்டைலிடிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது எளிதில் தாங்கிக்கொள்ள முடியாத வலியாக பாதிக்கப்பட்ட நபர்களை பாடாய் படுத்துகிறது. சர்விகல் ஸ்பாண்டிலோசஸ் என்பது கழுத்தில் அமைந்துள்ள முதுகெலும்பை பாதிக்கும் ஒருவித நோயாகும். இது பொதுவாக வயதானவர்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. எனினும் இன்றைய காலத்தில் இது அனைத்து வயதினரையும் பாதிக்கிறது. அதிக நேரம் தூங்குவதாலும், தவறான நிலையில் அதிக நேரம் அமர்ந்திருப்பதாலும் முதுகெலும்பில் பாதிப்பு ஏற்பட்டு கழுத்தில் வலி ஏற்படுகிறது. 

இந்த பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் கழுத்து மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் வலியை உணர்கிறார்கள். இப்பிரச்னையால், இயல்பு வாழ்க்கை நடத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. இருப்பினும், பிசியோதெரபி மற்றும் உடற்பயிற்சியின் உதவியுடன் இதை சமாளிக்க முடியும். நீங்கள் வீட்டு வைத்தியத்தை பின்பற்ற விரும்பினால், ஆயுர்வேதத்தின் உதவியைப் பெறுவது சிறந்த தேர்வாக இருக்கும். 

இந்த 2 எண்ணெய் சர்விகல் வலியை நீக்கும்

1. ஆமணக்கு எண்ணெய்

சர்விகல் வலிக்கு ஆமணக்கு எண்ணெய் அருமருந்தாக பலன் தரும். இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. ஆயுர்வேதத்திலும் இந்த எண்ணெயில் உள்ள பல பண்புகள் பற்றி கூறப்பட்டுள்ளன. இந்த எண்ணெயைக் கொண்டு தொடர்ந்து கழுத்தை மசாஜ் செய்து வந்தால் சர்விகல் பிரச்சனை சரியாகும்.

மேலும் படிக்க | கருவளையங்களால் பிரச்சனையா? இப்படி செஞ்சி பாருங்க, உடனடி பலன் கிடைக்கும் 

2. நல்லெண்ணெய்

மூட்டு வலியைக் குணப்படுத்த நல்லெண்ணெயைப் பயன்படுத்துகிறோம். ஆனால் சர்விகல் வலியை விரட்டவும் இந்த எண்ணெய் பயன்படும் என்பது மிகச் சிலருக்குத்தான் தெரியும். இந்த எண்ணெயை கைகளில் தடவி பாதிக்கப்பட்ட இடத்தில் மசாஜ் செய்யவும். இது நாள்பட்ட வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

இந்த வைத்தியங்களையும் முயற்சிக்கலாம்

பூண்டு

சர்விகல் வலியால் பிரச்சனை உள்ளவர்கள், பூண்டு பற்களை சாப்பிடலாம், அல்லது பூண்டை அரைத்து கடுகு எண்ணெயுடன் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம். அல்லது இந்த எண்ணெயை குளிர்ச்சியாக அல்லது சிறிது சூடாக்கி, மசாஜ் செய்யலாம். இந்த வழிகளில் பூண்டை பயன்படுத்தினால், சர்விகல் வலியில் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

 அஸ்வகந்தா

அஸ்வகந்தா ஒரு நோயெதிர்ப்பு ஊக்கி என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வலியைப் போக்கும் பணிகளை செய்கின்றன. அசௌகரியம் ஏற்பட்டால், அஸ்வகந்தா பொடியை வெதுவெதுப்பான நீர் அல்லது பாலில் கலந்து சாப்பிடவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வயிற்றில் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆரம்பகால அறிகுறிகள் ! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News