கோவையை கலக்கும் `வாழைத்தண்டு மசாலா` சிற்றுண்டி ..!
கோவை மாவட்டம் சாஸ்திரி சாலையில் புதிதாக திறக்கப்பட்ட ‘வாழைத்தண்டு மசாலா’சிற்றுண்டி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கோவை மாவட்டம் சாஸ்திரி சாலையில் புதிதாக திறக்கப்பட்ட வாழைத்தண்டு மசாலா சிற்றுண்டியில் வாழைத்தண்டு தான் மெயின் டிஸ். மருத்துவம் குணம் கொண்ட 8 வகையான வாழை தண்டு மசாலாவை நேர்த்தியான முறையில் சுவையாக தயாரித்து விற்கின்றனர். அதுவும் அடுப்பிலா இயற்கை முறையில் வெறும் 1 நிமிடத்தில் தயார் செய்கிறார்கள். இனிப்பு, காரம் துவர்ப்பு, என எந்த சுவை வேண்டுமானாலும் அதை வாழைத்தண்டோ சேர்ந்து தயார் செய்து கொடுக்கிறார்கள்.
இரும்புசத்து, வைட்டமின் பி6 அதிகளவு கொண்ட வாழைத்தண்டு சிறுநீரக கற்களால் வலிமிகுந்த உபாதையை அனுபவிப்பவர்கள் அதிலிருந்து குணமடைய பெரிதும் உதவும். இதனால் சிறுநீரக கோளாறுகளை தடுக்க வாழைத்தண்டு முதன்மையாக செயல்படுகிறது. அதே போல் ரத்ததில் ஹீமாகுளோபின் அளவினை அதிகரிக்கச் செய்து ரத்த சோகையை குணப்படுத்தும் வாழைத்தண்டு, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுமருந்தாக பயன்படுகிறது.
மேலும் படிக்க | உடல் எடை குறையணுமா; டீயுடன் இவற்றை சாப்பிடாதீர்கள்
இத்தகைய மருத்துவ பண்புகளை கொண்ட வாழைத்தண்டை கோடை காலத்தில் கோவை மக்கள் தேடி வந்து ருசிக்கின்றனர்.
மேலும் படிக்க | உங்க கிட்னில பிரச்சனையா, இந்த உணவுகள ஒருபோதும் சாப்பிடவே கூடாது
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR