உடலுக்கு ஊக்கத்தைத் தரும் வாழைப்பழம் தேன் காம்பினேஷன்
Banana+Honey = Health: சத்துக்கள் அதிகம் கொண்ட தேனும் வாழையும் ஒன்று சேர்ந்தால் அது நோய் தீர்க்கும் அமுதமாகிறது
ஆரோக்கியத்திற்கு உகந்த வாழைப்பழம் பல்வேறு நன்மைகளைக் கொண்டது. மிகவும் சுலபமாக விலை மலிவாக கிடைத்தாலும், வாழைப் பழத்தில் உள்ள நன்மைகளை பட்டியலிடுவது என்பது மிகவும் கடினமானது. அதேபோலத் தான் தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் அளவிட முடியாதது: இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று ஆரோக்கிய ஆலோசகர்கள் பரிந்துரைக்கின்றனர். வாழைப்பழம் மற்றும் தேன் இரண்டும் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால், பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்.
வாழைப்பழத்தில் பொட்டாசியம், விட்டமின் பி6, விட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்கள் போன்ற சத்துக்கள் உள்ளது. வாழைப்பழத்தில் உள்ள பல வகையான வைட்டமின்கள் பல பிரச்சனைகளில் இருந்து ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
மேலும் படிக்க: மன அழுத்தத்தை விரட்டும் 6 பழங்கள்
தேன் ஒரு மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட உணவுப் பொருளாகும். தேன் பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது. 'வயிற்றின் நண்பன்' என பெருமைப்படுத்தப்படும் தேனில் 70 வகையான வைட்டமின் சத்துக்கள் அடங்கியுள்ளன.
பொட்டாசியம், விட்டமின் பி6, விட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்கள் போன்ற சத்துக்கள் என பல சத்துக்கள் கொக்ண்ட வாழைப்பழத்துடன் கூட்டு சேர்ந்தால் தேனின் ஆரோக்கிய பண்புகளும் அதிகரிக்கிறது.
மேலும் படிக்க | எவ்வளவு சாப்பிட்டாலும் எடை அதிகமாகாது! எஞ்சாய்
அதே நேரத்தில், தேனின் பயன்பாடு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். வைட்டமின் சி சத்து இருப்பதால், சருமத்தின் பொலிவை அதிகரிப்பது மட்டுமின்றி, சருமம் தொடர்பான பிரச்சனைகளையும் நீக்கும்.
வாழைப்பழம் மற்றும் தேன் ஆகியவை குளிர்ச்சியை அகற்றுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த இரண்டு கலவைகளும் வைரஸைக் குணப்படுத்துவதோடு, உடலில் இருக்கும் தொற்றுநோயை அகற்றவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்க | ஆரோக்கியத்திற்கு உகந்த இந்த காய்கறிகளே உடல்நலனுக்கு எதிராகும்
நீங்கள் எடையைக் கட்டுப்படுத்த விரும்பினால், உங்கள் உணவில் வாழைப்பழம் மற்றும் தேன் இரண்டையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த இரண்டின் கலவையும் பசியைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளவை,
வாழைப்பழத்துடன் தேன் சேரும்போது, வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்தின் திறன் மேம்படுகிறது. இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. வாழைப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டாலோ அவைல், இந்த கலவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவலை அடிப்படையாகக் கொண்டவை. இதற்கு Zee News Tamil பொறுப்பேற்காது)
மேலும் படிக்க | மலச்சிக்கல் முதல் குடல் எரிச்சல் வரை: குடல் பிரச்சனைகளுக்கு காரணமாகும் மழைக்காலம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ