உடல் எடை குறைப்பு டிப்ஸ்: உடல் எடையை குறைப்பது மிகவும் சுலபமானது தான், ஆனால் அதற்கு தேவை எந்தவிதமான உணவை சாப்பிட்டால். உடல் எடையை குறைக்க முடியும் என்பது தான். வழக்கமான உடற்பயிற்சியுடன், உணவிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உணவில் உள்ள கலோரி எண்ணிக்கையே உடலின் எடை கூடவும் குறையவும் காரணமாகிறது. எதிர்மறை கலோரி உணவுகள் உள்ளன என்பதும், அவற்றை எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காது என்பதும் ஆச்சரியம் அளிக்குக்ம். இந்த உணவுகளை உட்கொண்ட பிறகு, உங்கள் உடல் உணவுப் பொருட்களை ஜீரணிக்க, ஏற்கனவே உடலில் சேமிக்கப்பட்ட கலோரிகளைப் பயன்படுத்த வேண்டும்.
இதனால், நாம் புதிதாக உணவு உண்டாலும், பழைய கலோரிகள் எரிக்கப்படுவதால், உடல் எடை குறைப்பு துரிதமாகிறது. எதிர்மறை கலோரிகள் கொண்ட உணவுகள் உடல் எடையை குறைக்கும் என்று. ஃபிசிகோ டயட் கிளினிக்கின் நிறுவனரான டயட்டீஷியன் விதி சாவ்லா கூறுகிறார். உங்கள் வீட்டின் மளிகைப் பொருட்கள் பட்டியலில் நீங்கள் சேர்த்துக்கொள்ளக்கூடிய சில குறைந்த கலோரி உணவுகளின் பட்டியல் என்ன? தெரிந்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | ஆரோக்கியத்திற்கு உகந்த இந்த காய்கறிகளே உடல்நலனுக்கு எதிராகும்
பாப்கார்ன்: பாப்கார்ன் ஆரோக்கியமான சிற்றுண்டி என்பது உங்களுக்குத் தெரியுமா? பாப்கார்ன்களில் நார்ச்சத்து அதிகம் மற்றும் வியக்கத்தக்க வகையில் கலோரிகள் குறைவாக உள்ளன, மேலும் வழக்கமாகத் தேர்ந்தெடுக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற மற்ற தின்பண்டங்களை விட பசியை போக்கும் தன்மை கொண்டது பாப்கார்ன்.
பாப்கார்ன்களில் ஆற்றல் அடர்த்தி குறைவாக இருப்பதால் எடை குறைக்க உதவுகிறது. கூடுதலாக, பாப்கார்ன் ஒரு முழு தானியமாகும், இது எடையைக் குறைக்க ஒரு சிறந்த உதவியாகும். பாப்கார்னை மெல்லும்போது, உங்கள் தாடையும் நன்றாக இயங்குகிறது.
ஓட்ஸ்: ஓட்ஸ் உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும். ஆரோக்கியமான தானியங்களில் ஒன்றாகும். ஓட்ஸ் என்பது உணவு நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரப்பப்பட்ட பசையம் இல்லாத முழு தானியமாகும்.
உடல் எடையை குறைப்பதற்கான பொதுவான வழி, நீண்ட காலத்திற்கு உங்களை முழுதாக வைத்திருக்கக்கூடிய உணவுகளை உண்பதே என்பதால், ஓட்ஸில் உள்ள லீன் புரோட்டீன் உங்கள் எடையை குறைய உதவியாக இருக்கும்.
பெர்ரி: ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரி என பலவிதமான பெர்ரி பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. நீர்ச்சத்து அதிகம் கொண்ட பெர்ரிகள் நாவின் சுவை மொட்டுகளுக்கு மகிழ்ச்சியைத் தருவதுடன், தொப்பை மற்றும் உடல் எடையைக் குறைக்க ஒரு அருமையான வழியாகும்.
இந்த பழங்களில் உள்ள உணவு நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் உங்கள் வயிற்றை சமன் செய்ய உதவுகிறது. கூடுதலாக, ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரிகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இந்த பழங்கள சாப்பிட்டு பாருங்க, சட்டுனு உடல் எடை குறையும்
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சருமத்தில் சொறி, அரிப்பு தொல்லையா? இந்த வீட்டு வைத்தியங்களால் நிவாரணம் பெறலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ