உலகெங்கிலும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் கோவிட் -19  பாதிப்புகளுக்கு இடையே, உலகில் பல இடங்களில் தடுப்பு மருதை கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், ஆசியாவில் உள்ள ஒரு நாட்டில், மக்கள் கொடிய வைரஸ் கொரோனாவை ஒழிக்க, சோள காட்டு பொம்மையை நிறுத்தியுள்ளனர்.


கம்போடியாவில் சோளக்காட்டு மொம்மைகள் டெங்கு தொற்று நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களில் காணப்படுகின்றன.


கம்போடியர்கள் சில சடங்குகள் மற்றும் நடைமுறையில் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். பூமியில் உள்ள அனைத்திலும், பொருட்கள், விலங்குகள், என அனைத்திலும் ஆவிகள் பிணைக்கப்பட்டுள்ளன என்று கம்போடியர்களில் பெரும்பாலோர் நம்புகிறார்கள்.


நோயைப் பரப்புவதன் மூலம் மக்களுக்கு தீங்கு விளைவிக்க விரும்பும் தீய சக்திகளை, அதாவது கொரோனா வைரஸை, சோளக்காட்டு பொம்மைகள் தடுக்க முடியும் என்று கம்போடியர்கள் நம்புகிறார்கள்.


பல கிராமங்களில், இந்த சோளக்கட்டு பொமைகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டின் வாயிலிலும் கட்டப்பட்டுள்ளன.  இதில் சில சோள காட்டு பொம்மைகளுக்கு ராணுவ உடை அணிவித்துள்ளனர். சில சாதாரண உடையை அணிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | எங்கள் நாட்டில், கொரோனா இல்லை.. இல்லவே இல்லை : Kim Jong Un


கொரோனா வைரஸ் பரவலால் கம்போடியா அதிகம் பாதிக்கப்படவில்லை என்பதும் ஆச்சர்யம் அளிக்கும் விஷயமாக உள்ளது. ஏனெனில் இது 283 பாதிப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன.  இறப்புகள் இல்லை. இருப்பினும், கம்போடியாவில் COVID-19 பரிசோதனை மிக குறைவான எண்ணிக்கையில் செய்யப்பட்டுள்ளதும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.


கம்போடியா (Cambodia) ஒரு தென்கிழக்கு ஆசிய நாடு மற்றும் அதன் தலைநகரம் புனோம் பென் (Phnom Penh)ஆகும். கம்போடிய தலைநகரத்தில், ஆர்ட் டெகோ என்னும் செண்ட்ரல் மார்கெட், பளபளக்கும் ராயல் பேலஸ் உள்ளது. மேலும் வரலாற்று சிறப்பு மிக்க பொருட்கள் அடங்கிய தேசிய அருங்காட்சியம் உள்ளது.


மேலும் படிக்க | COVID -19: இந்தியாவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட 5 மாநிலங்கள் எது தெரியுமா..!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe