படுத்தி எடுக்கும் யூரிக் அமிலத்தை பக்குவமாய் குறைக்கும் உணவுகள்
Uric Acid Control: யூரிக் அமிலத்தைக் குறைக்க, மருந்துகளுடன், முறையான உணவுப் பழக்கமும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் மிக அவசியமாகும்.
Uric Acid Control: இன்றைய நவீன காலகட்டத்தில் பல வித நோய்கள் நம்மை ஆட்கொள்கின்றன. இவற்றில் யூரிக் அமில அளவு அதிகரிப்பதும் ஒன்று. அதிக யூரிக் ஆசிட் பிரச்சனை சர்வ சாதாரணமாகிவிட்டது. இதற்கு மோசமான வாழ்க்கை முறையும், ஆரோக்கியமற்ற உணவும் தான் பெரிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. நமது உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது, வீக்கம், வலி மற்றும் கீல்வாதம் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. ஆகையால், யூரிக் அமில அளவை எப்போதும் கட்டுக்குள் வைக்க வேண்டியது மிக அவசியம் ஆகும்.
யூரிக் அமில அளவு அதிகமானால் மூட்டுகள் பாதிக்கப்படுவதோடு மட்டுமலாம்ல, சிறுநீரகம் மற்றும் இதய நோய்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. யூரிக் அமிலத்தைக் குறைக்க, மருந்துகளுடன், முறையான உணவுப் பழக்கமும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் மிக அவசியமாகும். சில எளிய இயற்கையான வழிகளில் யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்கலாம். யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சில உணவுகள் பற்றி இங்கே காணலாம்.
காபி (Coffee)
அதிக யூரிக் அமில அளவைக் குறைக்க, காபி உட்கொள்ளலாம். காபியில் உள்ள பண்புகள் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க உதவுகின்றன. அதிக யூரிக் அமிலத்தால் அவதியில் உள்ளவர்கள், தங்கள் உணவில் சரியான அளவு காபியை சேர்த்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | தொப்பை கொழுப்பை வேகமாய் குறைக்க இலவங்கப்பட்டையை இப்படி உட்கொண்டால் போதும்
செர்ரி (Cherries)
செர்ரியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனை உட்கொள்வதால் யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்தலாம். தினசரி டயட்டில் போதுமான அளவு நார்ச்த்து இருப்பதால், சீரம் யூரிக் அமிலம் குறைகிறது. செர்ரியில் அதிக அளவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. இவை கீல்வாத தாக்குதல்களைத் தடுக்கவும் உதவுகின்றன. மேலும் இவை எலும்புகளுக்கும் போதுமான சத்தை அளிக்கின்றன.
ஆப்பிள் (Apple)
ஆப்பிள் பல வித அரொக்கிய நன்மைகள் அடங்கிய பழமாக பார்க்கப்படுகின்றது. ஆப்பிளில் அதிக நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்து யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆப்பிள் சாப்பிடுவதால், அதில் உள்ள நார்ச்சத்து, இரத்த ஓட்டத்தில் இருந்து அதிகப்படியான யூரிக் அமிலத்தை அகற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும்.
பால் மற்றும் தயிர் (Milk, Curd)
குறைந்த கொழுப்புள்ள பால் மற்றும் தயிர் யூரிக் அமில அளவைக் குறைக்க உதவுகின்றன. இவை உடலில் சேரும் அதிக யூரிக் அமிலத்தை அகற்றவும் உதவுகின்றன. பால் மற்றும் தயிர் புரதத்தின் நல்ல மூலமாக பார்க்கப்படுகின்றன. சிவப்பு இறைச்சி போன்ற பிற புரத மூலங்களைக் காட்டிலும் இவற்றில் குறைந்த அளவு பியூரின்கள் உள்ளன.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இதயம் தொடர்பான நோய்க்கு புதிய கண்டுபிடிப்பு! இனி மாரடைப்பை தடுக்கலாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ