யூரிக் அமிலம் அதிகரித்தால் ஆபத்து: இந்த உணவுகள் மூலம் எளிதாய் கட்டுப்படுத்தலாம்

Uric Acid Control Tips: யூரிக் அமில பிரச்சனைக்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், மூட்டுகளில் அது பாதிப்பை ஏற்படுத்துவதோடு, சிறுநீரகம் மற்றும் இதய நோய்களையும் ஏற்படுத்தக்கூடும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 5, 2024, 04:44 PM IST
  • கடல் உணவுகளில் அதிக அளவு பியூரின் உள்ளது.
  • ஆகையால், இதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • மது அருந்துவது யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கிறது.
யூரிக் அமிலம் அதிகரித்தால் ஆபத்து: இந்த உணவுகள் மூலம் எளிதாய் கட்டுப்படுத்தலாம்

Uric Acid Control Tips: இன்றைய காலகட்டத்தில் அதிக யூரிக் அமில பிரச்சனை மிகவும் பொதுவானதாகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் நமது ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையாகும். உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது, ​​அது வலி, வீக்கம், கீல்வாதம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதுமட்டுமல்லாமல் சிறுநீரக கல் பாதிப்பும் அதிகரிக்கின்றது.

Add Zee News as a Preferred Source

யூரிக் அமில பிரச்சனைக்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், மூட்டுகளில் அது பாதிப்பை ஏற்படுத்துவதோடு, சிறுநீரகம் மற்றும் இதய நோய்களையும் ஏற்படுத்தக்கூடும். ஆகையால், யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமாகும். இதற்கு மருந்துகளைத் தவிர, சரியான உணவை உட்கொள்வதும் மிக அவசியம்.

சரியான உணவை தேர்வு செய்வது அவசியம்

பியூரின் என்ற தனிமத்தின் முறிவினால் யூரிக் அமிலம் நம் உடலில் உற்பத்தியாகிறது. சிறுநீரகங்கள் வழியாக சிறுநீர் வடிவில் இது உடலில் இருந்து வெளியேறும் . ஆனால் சிறுநீரகங்கள் சரியாக செயல்படாமல் போனாலோ, அல்லது பியூரின் அளவு அதிகமானாலோ, யூரிக் அமிலம் இரத்தத்தில் குவிந்து, மூட்டுவலி மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. ஆகையால், யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த சரியான உணவைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமாகும்.

யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைக்க உதவும் சில ஆரோக்கியமான உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

செர்ரி (Cherry)

யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த உதவும் சில உணவுகளில் முக்கியமானவை பழங்கள் மற்றும் காய்கறிகள். உதாரணமாக, செர்ரிகளை உட்கொள்வது யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதுமட்டுமின்றி கீல்வாத பிரச்சனையை நீக்குவதில் திறம்பட செயல்படும் கூறுகளை செர்ரி கொண்டுள்ளது. அதை பச்சையாக சாப்பிடலாம், அல்லது அதன் சாறு குடிக்கலாம்.

காபி (Coffee)

காபி உட்கொள்வது யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும். குறைந்த அளவில் காபி புடிப்பது யூரிக் அமில அளவைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது. அதிக யூரிக் அமிலத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்கள் தினமும் சரியான அளவில் காபி குடிக்கலாம்.

வைட்டமின் சி நிறைந்த உணவுகள் (Vitamin C Foods)

வைட்டமின் சி நிறைந்த உணவுகள் யூரிக் அமிலத்தை உடைத்து, உடலில் இருந்து வெளியேற்ற  உதவுகின்றன. இதற்கு கிவி, எலுமிச்சை, நெல்லிக்காய், கொய்யா, ஆரஞ்சு, தக்காளி போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இவை யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைப்பதோடு கீல்வாத பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகின்றன.

மேலும் படிக்க | தினமும் 1 அவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 நன்மைகள்!

இந்த விஷயங்களை தவிர்க்கவும்

யூரிக் அமிலம் அதிகமாக உள்ள நபர்கள், யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கச் செய்யும் சில உணவுப் பொருட்களைத் தவிர்ப்பதும் அவசியம். 

- மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி போன்ற சிவப்பு இறைச்சியில் அதிக அளவு பியூரின்கள் உள்ளன. ஆகையால், அவற்றை தவிர்ப்பது நல்லது. 

- இதனுடன், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்பு இறைச்சிகளிலும் அதிக அளவு பியூரின்கள் உள்ளன. இதன் காரணமாக இவற்றை சாப்பிடுவதையும் தவிர்ப்பது நல்லது.

- கடல் உணவுகளில் அதிக அளவு பியூரின் உள்ளது. ஆகையால், இதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

- இவை தவிர, மது அருந்துவது யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கிறது. ஆகையால், அதையும் தவிர்க்க வேண்டும். 

- சர்க்கரையின் அதிகப்படியான நுகர்வு யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கலாம், எனவே அதன் அளவை குறைவாக வைத்திருங்கள்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | LDL கொலஸ்ட்ராலை வேகமாய் குறைக்கும் அற்புதமான உணவுகள்: கொழுப்புக்கு குட்பை சொல்லிடலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News