முருங்கை இலையை வெறும் வயிற்றில் சாப்பிடுங்க... உடம்பு தெம்பாகும் - இந்த 4 நன்மைகள் கிடைக்கும்!
Health Benefits Of Moringa Leaves: முருங்கை இலையை வெறும் வயிற்றில் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நான்கு நன்மைகளை இங்கு காணலாம்.
Health Benefits Of Moringa Leaves In Empty Stomach: முருங்கை இலை நமது சுற்றத்தில் எளிமையாக கிடைக்கக்கூடிய கீரை வகை ஆகும். குறிப்பாக, தமிழர்களின் உணவில் முருங்கைக்கீரை அதாவது முருங்கை இலை மிகவும் பரிட்டசயமானது. முருங்கை இலை குழம்பு, முருங்கை இலை கூட்டு, முருங்கை இலை பொரியல் என பல்வேறு வகையில் அதனை சாப்பிடலாம். வாரம் ஒருநாளாவது முருங்கை இலையை சாப்பிட வேண்டும் என பெரியவர்கள் கூறுவதும் உண்டு.
அதற்கு முக்கிய காரணம் முருங்கை இலையில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதிலும் வைட்டமிண்கள், கனிமங்கள், ஆண்டிஆக்ஸிடன்ட்கள், அமினோ அமிலங்கள் அதிகம் இருக்கின்றன. அப்படியிருக்கையில், நீங்கள் வெறும் வயிற்றில் முருங்கை இலையை சாப்பிடுவதன் மூலம் உடல் இந்த ஊட்டச்சத்துகளை முழுமையாக உள்ளிழுத்துக்கொள்ளும். ஏனென்றால் வயிற்றில் வேறு உணவுகள் இல்லாதபட்சத்தில் முருங்கை இலையின் முழு பலனும் உங்களுக்கு கிடைக்கலாம்.
அந்த வகையில், இதனை நீங்கள் தொடர்ச்சியாக செய்தால் நோய் எதிர்ப்பு சக்தி வலுபெறும், ஆற்றல் அதிகரிக்கும், செரிமானம் சீராகும். ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் நலமாக இருக்கும். இந்நிலையில், காலை பொழுதில் உங்களின் உணவுப் பழக்கவழக்கத்தில் முருங்கை இலையை எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் நான்கு நன்மைகளை இங்கு காணலாம்.
இதையும் படிங்க | வைட்டமின் பி12 குறைபாட்டை சரிசெய்ய உதவும் சிறந்த மஞ்சள் உணவுகள்
சரும ஆரோக்கியம்
வெறும் வயிற்றில் முருங்கை இலை சாப்பிடுவதால் அலர்ஜிகள் குறையும், சரும எரிச்சல் பிரச்னைகள் நீங்கும். இதை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் தோலில் மெல்லிய சுருக்கங்கள், தோல் தொங்குதல் போன்ற பிரச்னையை தவிர்க்கலாம்.
செரிமானத்திற்கு நல்லது
முருங்கை இலையில் அதிக நார்ச்சத்து இருக்கிறது. இது மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்களுக்கு உதவும், குடல் இயக்குமும் இயல்பாக இருக்கும். கூடுதலாக இதில் ஐசோதியோசயனேட் மற்றும் குளுக்கோசினோலேட் போன்ற மூலக்கூறுகள் உள்ளன. இவை குடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி, அதனை சுத்தமாக்கி செரிமானத்தை சீராக்கும்.
ஆற்றல் அதிகரிக்கும்
இதில் உடலுக்கு தேவையான முக்கியமான கனிமங்கள், வைட்டமிண்கள் இருக்கின்றன. அதாவது, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாஸியம் உள்ளிட்டவை முருங்கை இலையில் இருக்கின்றன. இவை உடலில் ஆற்றல் அதிகரிக்க வழிவகுக்கும். அதிலும் குறிப்பாக இரும்புச்சத்து உங்களின் பலவீனமான உணர்வை போக்கும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, செல்களுக்கு ஆக்ஸிஜன் டெலிவரியும் அதிகரிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகும்
வெறும் வயிற்றில் அடிக்கடி முருங்கை இலை சாப்பிடுவதன் மூலம் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி வலுபெற்று, உடல்நலம் குன்றாமல் பார்த்துக்கொள்ளலாம். குறிப்பாக, காய்ச்சல், சளி மற்றும் பிற தொற்றுகளில் இருந்து இது உங்களை பாதுகாக்கும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்து எழுதப்பட்டதாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
இதையும் படிங்க | நீரிழிவு நோயாளியா நீங்கள்? இந்த ஜூஸ் பக்கமே போகாதீர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ