தினமும் இந்த அளவிற்கு சர்க்கரை சாப்பிட்டால்... சுகர் அதிகரிக்காது - ஹேப்பியா சாப்பிடலாம்!
Daily Sugar Intake Level: உங்களின் ரத்த சர்க்கரை அளவு உயராமல் இருக்க தினமும் எந்த அளவிற்கு சர்க்கரையை உட்கொள்ளலாம் என்பது குறித்து இதில் விரிவாக காணலாம்.
Daily Sugar Intake Level: உடல் ஆரோக்கியத்தை பேணி காப்பது என்பது ஒரு பெரும் சொத்துக்களை சேர்ப்பது சமமானது என சிறு வயதில் பலர் சொல்ல நாம் கேட்டிருப்போம். வயதாக வயதாகதான் அது எவ்வளவு பெரிய விஷயம் என்பதே பலருக்கும் புரியும் எனலாம். உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்திருப்பது என்பது ஒழுக்கமான வாழ்க்கைமுறையை கடைபிடிப்பதும், உணவுப் பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடுடன் இருப்பதும் அடங்கும்.
இந்த காலகட்டத்தில் உடல் பருமன் (Obesity) என்பது சாதாரணமாகிவிட்டது. வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றங்களால் உடல் அசைவு என்பது மிக மிக குறைந்துவிட்டது எனலாம். லேப்டாப், கணினி முன்னர் மணிக்காக உட்கார்ந்திருப்பதில் தொடங்கி, துரித உணவுகளை அதிகம் உட்கொள்வது, சத்தான உணவுகளை தவிர்ப்பது, சரியாக தண்ணீர் குடிக்காதது, பழங்கள் மற்றும் காய்கறிகளை தவிர்ப்பது, சரியான நேரத்தில், சரியான அளவிலும் தூங்காதது என உடல் ஆரோக்கியம் கெடுவதற்கு பல வழிகள் இருக்கின்றன எனலாம்.
இனிப்புக்கு அடிமை
அதிலும் குறிப்பாக உடல் பருமனுக்கும், உடல் ஆரோக்கியம் கெடுவதற்கும் அதிக இனிப்பை உட்கொள்ளுதல் ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. மேலும், நீரிழிவு நோய்களும் (Diabetes) மக்களிடைய அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் சர்க்கரை உட்கொள்வதில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும், சிலருக்கு இனிப்பை சாப்பிடாமல் இருக்கவே முடியாது. டீ, காபி, ஜூஸ், கேக் என எதையாவது தினமும் சாப்பிட்டே ஆக வேண்டும் என நினைப்பார்கள்.
மேலும் படிக்க | 20 நாட்களில் சொட்டை தலையிலும் முடி வளரும். இந்த வீட்டு வைத்தியம் போதும்
அப்படியிருக்க எப்படி ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் சீராக வைத்திருப்பது என்பேத பலரின் கேள்வியாக உள்ளது. இந்நிலையில், உங்களின் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கக்கூடாது என்றால் தினமும் குறிப்பிட்ட அளவிற்கு மட்டும் சர்க்கரையை எடுத்துக்கொள்ளலாம். அந்த அளவு குறித்தும், அதனை எப்படி பின்பற்றுவது என்பது குறித்தும் இதில் காணலாம்.
WHO அறிவுறுத்தல்...
தினமும் எந்தளவிற்கு சர்க்கரையை உட்கொள்ளலாம் என்பது குறித்து உலக சுகாதார மையம் (World Health Organisation - WHO) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 18 வயதை தாண்டிய நபர்கள், தினமும் தங்களின் மொத்த கலோரியில் 10 சதவீதத்தை தாண்டி சர்க்கரையை உட்கொள்ளக்கூடாது. அதாவது, நீங்கள் தினமும் 2000 கலோரிகளை உட்கொள்கிறீர்கள் என்றால் 200 கலோரிகளுக்கு மேல் இனிப்பை சாப்பிடக்கூடாது. இதன் அளவு 50 கிராம் சர்க்கரை அல்லது 12 டீ ஸ்பூன் சர்க்கரை எனலாம்.
எவ்வளவு சரக்கரையை சாப்பிடலாம்?
மேலும், நீங்கள் 200 கலோரிகள் வரை சர்க்கரை உட்கொண்டால் பிரச்னை இல்லை என்றாலும், தினமும் 100 கலோரிகள் அளவிற்கு சர்க்கரை உட்கொண்டால் அது இன்னும் கூடுதல் நன்மையை தரும் என WHO அறிவுறுத்தி உள்ளது. அப்படி பார்க்கும் போது தினமும் 25 கிராம் சர்க்கரை அல்லது 6 டீ ஸ்பூன் அளவு சர்க்கரையை எடுத்துக்கொள்வது நன்மையை தரும்.
உடனே கைவிடுங்கள்...
மேலும், சர்க்கரை அளவை இன்னும் குறைக்க வேண்டும் என்றால் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுகள், பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்கள், பிஸ்கட்கள் ஆகியவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும். இதில் அதிகளவில் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். சர்க்கரை சாப்பிட வேண்டும் போல் இருந்தால் பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள், அதில் சர்க்கரை அளவு குறைவாகும்.
அளவுக்கு அதிகமாக சர்க்கரையை எடுத்துக்கொள்வதால் உடல் பருமன், டைப் 2 நீரிழிவு, பற்களில் பிரச்னை மற்றும் இதய நோய் (Heart Disease) கூட வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. எனவே, தினமும் உங்களின் சாப்பாட்டில் இருக்கும் சர்க்கரை அளவில் கவனம் செலுத்தவும்.
மேலும் படிக்க | கோடை காலத்தில் சரும பராமரிப்பிறகு இந்த வீட்டு வைத்தியங்கள் ட்ரை பண்ணுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ