Cooking Tips: சூப்பரான வெள்ளரிக்காய்ப் பாயசம் செய்வது எப்படி? இப்படித்தான்…
பாயாசம் என்றாலே பொதுவாக அனைவருக்கும் பிடிக்கும். சத்தான, வித்தியாசமான வெள்ளரிக்காய் பாயசம் சாப்பிட்டிருக்கிறீர்களா? செய்வது சுலபம், ருசியோ அபாரம்…
மனிதன் எதைத் துறந்தாலும் பசி என்ற ஒன்றை மற்றும் துறக்க முடியாது. துறக்க நினைத்தாலும் அது துரத்திக் கொண்டு வரும். பசிக்கு மட்டுமா சாப்பிடுகிறோம்? ருசிக்காக சாப்பிடுவதும் அவசியம் தானே?
பாயாசம் என்றாலே பொதுவாக அனைவருக்கும் பிடிக்கும். சத்தான, வித்தியாசமான வெள்ளரிக்காய் பாயசம் சாப்பிட்டிருக்கிறீர்களா? செய்வது சுலபம், ருசியோ அபாரம்…
சுவையான வெள்ளரிக்காய் பாயசம் செய்யும் செய்முறை:
தேவையான பொருட்கள்.:
வெள்ளரிக்காய் – பெரிதாக ஒன்று
பால் - 3000 மில்லி,
சர்க்கரை அல்லது நாட்டுச் சக்கரை - தேவையான அளவு,
அரிசி மாவு - 2 டீஸ்பூன்,
பாதாம் – 10 எண்ணிக்கை,
நெய் - 2 டீஸ்பூன்,
முந்திரி - தேவையான அளவு
ஏலக்காய் பொடி
Also Read | இந்தக் காய் உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் நீர்க்காய்
செய்முறை.:
வெள்ளரிக்காயைத் தோல் நீக்கி துருவி வைத்துக்கொள்ளவும்.
பாதாமை மிக்சியில் அரைத்து எடுத்துக் கொண்டு அத்துடன் அரிசி மாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து, வெள்ளரிக்காயை நெய்யில் வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் வேக விடவும்.
வெள்ளரிக்காய் வெந்ததும், அரிசி மாவு மற்றும் பாதாம் கலவையைச் சேர்த்துக் கலக்கவும். .
பிறகு சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். அதன் பிறகு காய்ச்சிய பாலை ஊற்றி சிறிது நேரம் மிதமான தீயில் வைக்கவும். இறுதியில் நெய்யில் முந்திரையை வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும்.
வெள்ளரிக்காய் பாயசத்தை ஒருமுறை குடித்தால், அடிக்கடி செய்யச் சொல்லி அனைவரும் உங்களை நச்சரித்தால், அது உங்களுக்கு மகிழ்ச்சி தானே!
Also Read | மதிய உணவில் சாப்பிட ஏற்றது எது? தவிர்க்க வேண்டியவை எவை?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR