Good Lunch: மதிய உணவில் சாப்பிட ஏற்றது எது? தவிர்க்க வேண்டியவை எவை?

உணவே மருந்தாகும். சத்தான உணவை சாப்பிட்டால், நோய் தூரப் போகும். ஆனால், சத்தான உணவாக இருந்தாலும், அதை எப்போது உண்கிறோம் என்பதும் முக்கியமான ஒன்று.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 21, 2021, 03:29 PM IST
  • மதிய உணவில் சாப்பிட ஏற்றது எது?
  • தவிர்க்க வேண்டியவை எவை?
  • சத்தான உணவாக இருந்தாலும், அதை எப்போது உண்கிறோம் என்பதும் முக்கியமானது
Good Lunch: மதிய உணவில் சாப்பிட ஏற்றது எது? தவிர்க்க வேண்டியவை எவை? title=

உணவே மருந்தாகும். சத்தான உணவை சாப்பிட்டால், நோய் தூரப் போகும். ஆனால், சத்தான உணவாக இருந்தாலும், அதை எப்போது உண்கிறோம் என்பதும் முக்கியமான ஒன்று.

அதிலும் மதிய உணவு என்பது பொதுவாக அனைத்துச் சத்துக்களும் நிறைந்ததாக இருக்க வேண்டும். மதிய உணவில் தவிர்க்க வேண்டியவை மற்றும் சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

பட்டை தீட்டப்பட்ட அரிசியைத் தவிர்க்க வேண்டும். அரிசியை சுத்தப்படுத்த பலவிதமான ரசாயனங்கள் (chemicals) சேர்க்கப்படுகின்றன. பட்டைத் தீட்டப்பட்ட (polished) அரிசியில் சத்துக்களுக்கு பதிலாக, உடலுக்கு ஊறுவிளைவிக்கும் ரசாயனங்களே அதிக அளவில் இருக்கும் என்பதால் அரிசியை சாப்பிடுவதால் உடலுக்கு தீமையே நேரிடும்.

Also Read | Benefits of Ragi: பாலை விட 3 மடங்கு கால்சியம் எதில் இருக்கிறது தெரியுமா?

கைகுத்தல் அரிசியைப் பயன்படுத்தலாம். உடலுக்குத் தேவையான சத்துகள் இயற்கையாகவே இதில் நிறைந்திருக்கின்றன. இதைச் சாப்பிடுவதால், உடல் வலிமை பெறும்.

வரகு, திணை, சிவப்பரிசி, கம்பு, ராகி போன்ற தானியங்களில் ஏதாவது ஒன்றை மதிய உணவில் சேர்த்துக் கொள்வது நலம் தரும்.  அனைத்து வகைக் கீரைகளையும், காய்களையும், பயறுகளையும் மதிய உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

அனைத்து வகைக் கீரைகளையும், காய்களையும், பயறுகளையும் மதிய உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மதிய உணவில் நீர்ச் சத்துள்ள காய்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.  பூசணிக்காய், சுரைக்காய், பரங்கிக்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியவை.

Also Read | தயிரோடு மறந்துகூட இந்த 5 உணவையும் சேர்த்து சாப்பிடாதீங்க!

எண்ணெய் அதிகம் பயன்படுத்தப்படும் வறுவல்கள், பொரியல்களைத் தவிர்த்துவிட்டு, அவியல், கூட்டு போன்ற உணவு பதார்த்தங்களை மதிய உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மதிய உணவில் முட்டை சேர்த்துக்கொள்வதால் உடலுக்குத் தேவையான புரதச்சத்து கிடைக்கும். அதேபோல, அசைவ உணவு உண்பவர்கள், கோழி, மீன் போன்றவற்றை மதிய உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

அசைவ உணவுகளான மீன் வறுவல், பிரியாணி போன்றவற்றைச மதிய உணவில் மட்டுமே சாப்பிட்டால் நல்லது. அவை செரிமாணம் ஆக நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும்.

Also Read | உடலை பொன்னிறமாக்கும் பொன்னாங்கண்ணி கண்களுக்கு ஒளியூட்டும்

வாரத்தில் ஒரு முறை, மதிய உணவில் சமைத்த உணவுகளைத் தவிர்த்துஇட்டு, சாலட், பழச்சாறு போன்றவற்றை சாப்பிட்டால் உடல் புத்துணர்ச்சி பெறும்.

மைதாவில் தயாரிக்கப்படும் பரோட்டா உட்பட எந்தவொரு பதார்த்தத்தையும் மதிய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டாம். மதிய உணவில் ரசம் சாப்பிட்டாலோ, குடித்தாலோ அது செரிமானத்தை சீராக்கும்.  

மதிய உணவில் தயிரைச் சேர்த்துக் கொள்வது புத்துணர்ச்சி கிடைக்க வழிவகுக்கும். செரிமானப் பிரச்னை உள்ளவர்கள், தயிர் அலர்ஜி உள்ளவர்கள், மோரை மதிய உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

Also Read | மறந்து கூட இந்த உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிட வேண்டாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News