தினமும் கொத்தமல்லி இலையை ஜூஸ் செஞ்சு குடிச்சா இந்த பிரச்னையே வராது
கொத்தமல்லி மூலிகையும், கறிக்குப் பயன்படும் ஒரு சுவைப்பொருளும் ஆகும்.
நம் உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதில் சிறுநீரகம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுநீரக நச்சுக்களை போக்க இயற்கை வழிகள் நமக்கு தேவைப்படுகின்றன. அந்த வகையில் கொத்தமல்லி தண்ணீர் சிறுநீரக நச்சுக்களை நீக்கி சிறுநீரக நோய்களை களைகிறது.
கொத்தமல்லி (Coriander) மூலிகையும், கறிக்குப் பயன்படும் ஒரு சுவைப்பொருளும் ஆகும். இது Apiaceae தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. உணவு கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. இந்த கொத்தமல்லி சிறுநீரக நச்சுக்களை நீக்கி சிறுநீரக நோய்களை சரி செய்ய மிகவும் பயனாக உதவுகிறது. மேலும் கொத்தமல்லி இழைகள் நம் சிறுநீரகத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கவும், நோயற்ற நிலையில் வைக்கவும் நிறைய வழிகள் உள்ளன. அவை.,
ALSO READ | சமையலறையில் உள்ள மசாலாக்களின் கலவை மிகவும் ஆரோக்கியமானது: ஆய்வு!
சிறுநீரக கற்கள், பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய், டயாபெட்டிக் சிறுநீரக நோய், குளோமெருலோனெப்ரிடிஸ், சிறுநீரக தொற்று, சிறுநீரக புற்றுநோய் ஆகும். சிறுநீரகம் கொஞ்சம் கொஞ்சமாக பாதித்து வருவதற்கு நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு என்கின்றனர். கழிவுகள் சரியாக அகற்றப்படாமல் உடலிலேயே தங்கி விடுகின்றன. இதனால் சிறுநீர், நீர் தக்கவைத்தல், பசியின்மை, சோர்வு, அரிப்பு, தசை பிடிப்புகள் மற்றும் கருமையான சருமம் போன்ற மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
உங்க சிறுநீரகத்தை சுத்தப்படுத்த சில இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம். அந்த வகையில் பார்க்கும் போது கொத்தமல்லி இலைகள் சிறுநீரக நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. கொத்தமல்லியில் ஆண்டிமைக்ரோபையல், கால்-கை வலிப்பு, ஆண்டிடிரஸன், ஆண்டிமூட்டஜெனிக், அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. எனவே இந்த பண்புகள் சிறுநீரக செயல்பாட்டிற்கு பயன்படுகிறது. சிறுநீரக கற்கள் உட்பட அனைத்து சிறுநீரக பிரச்சனையும் களைகிறது, வயிற்றுப் போக்கு ஏற்பட காரணமான பாக்டீரியாக்களை அழிக்கிறது. கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது இப்படி பல நன்மைகள் உள்ளது.
கொத்தமல்லி தண்ணீர் தயாரிப்பது எப்படி
ஒரு கொத்தமல்லி கட்டை எடுத்து நன்றாக அதன் இலைகளை அலசி கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அந்த இலைகளை பொடிப்பொடியாக நறுக்கி சுத்தமான தண்ணீரை ஊற்றி 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து பிறகு ஆற விடுங்கள். பிறகு இந்த தண்ணீரை வடிகட்டி அதில் லெமன் ஜூஸை பிழிந்து ஒரு நாளைக்கு ஒரு முறை என குடித்து வாருங்கள். இந்த கொத்தமல்லி தண்ணீரே உங்க சிறுநீரக பிரச்சனைகளை பெருமளவில் குறைத்து விடும்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR