கொரோனாவின் அச்சுறுத்தல் அண்மையில் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நல்லதொரு செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. கொரோனாவை குணப்படுத்த வாய்வழி கொரோனா மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது மேன்கைண்ட் பார்மா. 5 நாட்கள் எடுத்துக் கொண்டால் போதும், கொரோனா சரியாகிவிடும். இதுவரை உள்ள கொரோனா சிகிச்சையில் இதுதான் மலிவானதாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் மருந்து நிறுவனமான மேன்கைண்ட் பார்மா (Mankind Pharma) கொரோனா வைரஸுக்கான மலிவான மருந்தை அறிமுகப்படுத்தவுள்ளது. கோவிட் -19 இன் மலிவான ஆன்டிவைரல் மருந்தான மோல்னுபிரவீர் (Anti-COVID-19 pill Molulife) இந்த வாரம் அறிமுகப்படுத்தப்படும். ஒரு காப்ஸ்யூல் 35 ரூபாய் என்ற விலைக்கு இந்த மருந்து கிடைக்கும். 


மான்கைண்ட் பார்மாவின் தலைவர் ஆர்.சி.ஜூனேஜாவின் இதனை தெரிவித்தார். மொலுலைஃப் (Molulife) என்ற கேப்ஸ்யூலை ஐந்து நாட்கள் எடுத்துக் கொண்டால் போதும், நோய் குணமாகிவிடும் என்று அவர் தெரிவித்தார்.


சுமார் 1,400 ரூபாய் செலவில் கொரோனாவை குணமாக்கும் மருந்து, இந்த வாரம் சந்தைக்கு வர தயாராக உள்ளது.



கோவிட் வைரஸ் எதிர்ப்பு மருந்து எவ்வாறு பயன்படுத்தப்படும்?
நிறுவனத்தின் கூற்றுப்படி, மோல்னுபிராவிர் 800 மிகி மருந்தின் அளவை ஐந்து நாட்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக்கொள்ள வேண்டும். 200 மி.கி அளவுள்ள 40 காப்ஸ்யூல்கள் ஒரு நோயாளிக்கு தேவையாகும்.


பல இந்திய மருந்து நிறுவனங்கள் வாய்வழி மாத்திரைகள் தயாரிக்கும் போட்டியில் மும்முரமாய் ஈடுபட்டுள்ளன. இதில் டோரன்ட் பார்மா, சிப்லா, சன் பார்மா, டாக்டர் ரெட்டிஸ், நாட்கோ, மைலன் மற்றும் ஹெட்டரோ ஆகியவை அடங்கும். தற்போது, ​​கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட வயது வந்த நோயாளிகளுக்கு வரையறுக்கப்பட்ட அவசரநிலைக்கு மட்டுமேஇந்த மருந்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


Also Read | கையில் தெரியும் ஒமிக்ரான் அறிகுறி! நகம் இப்படி இருந்தல் உடனே சிகிச்சை தேவை!


அனுமதி கொடுத்த நாடுகள்


அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில், கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு (Corona effected) மோல்னுபிராவிர் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (USFDA) மற்றும் UK மருத்துவம் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம் (MHRA) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சிப்லா, சன் பார்மா மற்றும் டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களும் மோல்னுபிரவீர் காப்ஸ்யூல்களை அறிமுகப்படுத்தும். 


மலிவான சிகிச்சை 
'மோல்ஃப்ளூ' என்ற பெயரில் கொரோனா மருந்து (Corona Medicine) நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ஒரு கேப்சூல் 35 ரூபாய் மட்டுமே என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் முதல் மெடிக்கல் ஸ்டோர்களில் கிடைக்கும். டாக்டர் ரெட்டிஸ் மோல்னுபிரவீர் என்ற ஆன்டிவைரல் மருந்தை மோல்ஃப்ளூ என்ற பிராண்டின் கீழ் விற்கும்.


ஒரு வில்லையில் 10 காப்ஸ்யூல்கள் இருக்கும். ஐந்து நாட்களுக்கு தேவைப்படும் 40 காப்ஸ்யூல்களுக்கு ரூ.1,400 செலவாகும். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் மலிவான சிகிச்சையாக இருக்கும்.


ALSO READ | ஒமிக்ரானுக்கு எதிராக மற்றொரு தடுப்பூசி..! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR