Omicron Symptoms: கையில் தெரியும் ஒமிக்ரான் அறிகுறி! நகம் இப்படி இருந்தல் உடனே சிகிச்சை தேவை!

உங்கள் நகத்தில் இந்த அறிகுறி இருந்தால், உடனே மருத்துவரை அணுகவும், உடனடி கொரோனா சிகிச்சை தேவைப்படலாம். தோல், உதடுகளில் இந்த அறிகுறிகள் இருந்தாலும், அவசர கோவிட்-19 சிகிச்சை தேவை என்று அர்த்தம்..

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 5, 2022, 07:10 AM IST
  • ஒமிக்ரானின் புதிய அறிகுறிகள்
  • நகத்தில் ஒமிக்ரான் அறிகுறி
  • உதடுகளில் புதிய கொரோனா தொற்று மாறுதலை ஏற்படுத்தும்
Omicron Symptoms: கையில் தெரியும் ஒமிக்ரான் அறிகுறி! நகம் இப்படி இருந்தல் உடனே சிகிச்சை தேவை! title=

Corona New Symptoms: கோவிட்-19 இன் புதிய ஆதிக்க மாறுபாடு, ஓமிக்ரான், ஒரே மாதத்தில் உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கிவிட்டது

மிகவும் துரிதமாக பரவக்கூடிய கொரோனா வைரஸின் ஒமிக்ரான் பிறழ்வு (Omicron Variant), குறைந்து வந்த கொரோனா பாதிப்பை திடீரென அதிகரித்துள்ளது. கோவிட் நோயின் அடுத்த அலை வந்துவிட்டதோ அதுவும் பூதாகரமாக என்ற கவலைகள் உலகெங்கிலும் வியாபித்துள்ளது. 

தற்போதைய சூழ்நிலையில், சுவாச நோய்த்தொற்று நோயான கொரோனாவின் பொதுவான மற்றும் அசாதாரணமான அறிகுறிகளைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது, இதனால் எதிர்பாராத நிகழ்வுகளைத் தவிர்க்க கூடிய துரித நடவடிக்கை எடுத்து தாக்கத்தைக் குறைக்கலாம்.

இந்த கொரோனாவின் வீரியத்தையும், அதன் அடிப்படையைப் பற்றி இன்னும் பல விஷயங்கள் தெரிய வேண்டியிருக்கிறது. ஆனால், ஓமிக்ரான் அறிகுறிகள் (symptoms of corona) வழக்கமான கொரோனா வைரஸ் அறிகுறிகளிலிருந்து வேறுபட்டவை என்பதை மருத்துவர்கள் கவனித்துள்ளனர்.

ALSO READ | எச்சரிக்கை! இதுதான் கொரோனாவின் அறிகுறிகள்

ஓமிக்ரான் தோல், உதடுகள் மற்றும் நகங்களில் அறிகுறிகள் காட்டுகிறது என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

உங்கள் நகத்தின் மேல் பகுதி நீலம் அல்லது சாம்பல் நிறமாக மாறியிருந்தால், நீங்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

அமெரிக்கன் சென்டர் ஃபார் டிசீஸ் கன்ட்ரோல் அண்ட் ப்ரிவென்ஷன் ( Center for Disease Control and Prevention) அமைப்பின் கணிப்புகளின்படி, ஓமிக்ரான் உள்ளவர்கள், முதன்மையான மூன்று அறிகுறிகளுடன் கூடுதலாக பலவிதமான அறிகுறிகளை அனுபவிக்கின்றனர்.

தோல், உதடுகள் மற்றும் நகங்கள் ஆகியவை வைரஸின் அறிகுறிகளில் சில மட்டுமே என்பதும் கவனிக்கத்தக்கது.

ALSO READ | ஒமிக்ரானால் கிரிக்கெட்டிலும் பாதிப்பு

நமது சருமத்தின் நிறமானது, வழக்கத்தில் இருந்து மாறுபட்டு, நீலம், வெளிர், சாம்பல் நிறமாக மாறுவது, உதடுகள் அல்லது நகத்தின் நிறத்தில் மாறுதல் ஏற்பட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் இது ரத்தத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையைக் (lack of oxygen in the blood) குறிப்பதாக இருக்கலாம்.

இந்த அறிகுறிகள் "அவசர எச்சரிக்கை குறிகாட்டிகள்" (emergency warning indicators), எனவே உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

மூச்சுத் திணறல், தொடர்ந்து வலி இருப்பது, மார்பில் பாரமாக இருப்பது, தலைசுற்றல், மயக்கமாக இருப்பதுபோல தோன்றுவது போன்றவையும் ஒமிக்ரானின் அவசரகால அறிகுறிகளாகும்.

கொரோனா

ஓமிக்ரான் மாறுபாட்டின் பிற அறிகுறிகள்

தொண்டையில் அரிப்பு
முதுகின் கீழ்பகுதியில் வலி
மூக்கு ஒழுகுதல் மற்றும் சளி
தலைவலி
சோர்வு
தும்மல்
இரவு நேரத்தில் அதிகம் வியர்ப்பது
உடல் வலிகள்
தோல் வெடிப்பு 

சில நோயாளிகளுக்கு கண்களில் வலி போன்றவையும் கொரோனாவின் ஒமிக்ரான் மாறுபாட்டின் மற்ற அறிகுறிகளாகும்.

ALSO READ | ஒமிக்ரானுக்கு எதிராக மற்றொரு தடுப்பூசி..! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News