உடலில் ஏற்கனவே இருக்கும் antibodies நம்மை கொரோனாவிலிருந்து காக்கலாம்: ஆய்வு
ஒரு புதிய ஆய்வில், ஜலதோஷத்தின் போது நோயெதிர்ப்பு மண்டலத்தால் உருவாக்கப்படும் சில ஆன்டிபாடிகள் COVID-19 ஐ குறிவைக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் உடலில் ஏற்கனவே உள்ள ஆன்டிபாடிகளின் பங்கு கண்டறியப்பட்டுள்ளது. ஒரு புதிய ஆய்வில், ஜலதோஷத்தின் போது நோயெதிர்ப்பு மண்டலத்தால் உருவாக்கப்படும் சில ஆன்டிபாடிகள் COVID-19 ஐ குறிவைக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த கொடிய வைரஸிலிருந்து இந்த ஆண்டிபாடிக்களால் உடலை காக்கவும் முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்றுநோய்களை (Corona Pandemic) எதிர்த்து நோயெதிர்ப்பு அமைப்பு ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது என்று பிரிட்டனின் பிரான்சிஸ் கிரிக் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய ஆன்டிபாடிகள் சில காலம் இரத்தத்தில் இருக்கும். தொற்றால் மீண்டும் உடல் தாக்கப்படாமல் இவை நம்மைக் காக்கும்.
சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின்படி, கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சிலரின், குறிப்பாக குழந்தைகளின் இரத்தத்தில் ஆபத்தான வைரஸின் ஆன்டிபாடிகள் கண்டறியப்பட்டுள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
அத்தகைய நபர்களுக்கு ஜலதோஷம் மற்றும் சளி போன்றவற்றின் விளைவாக இத்தகைய ஆன்டிபாடிகள் (Antibody) தோன்றியிருக்கலாம். இந்த முடிவு கோவிட் -19 நோயாளிகள் மற்றும் சாதாரண மக்களின் இரத்த மாதிரிகள் பகுப்பாய்வு அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.
கோவிட் -19 க்கு ஆளாகாத மக்களின் இரத்தத்தில் ஆன்டிபாடிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த முடிவுகளை உறுதிப்படுத்த தொற்றுநோய்க்கு முன்னர் சேகரிக்கப்பட்ட 300 க்கும் மேற்பட்ட இரத்த மாதிரிகளையும் அவர்கள் பரிசோதித்தனர்.
பிரான்சிஸ் என்ஜி கிரிக் இன்ஸ்டிடியூட்டின் முன்னணி ஆராய்ச்சியாளர் கெவின் என்ஜி, "பெரியவர்களை விட குழந்தைகளது உடலில் இதுபோன்ற ஆன்டிபாடிகள் அதிகம் இருப்பதற்கான அதிக சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என எங்கள் முடிவுகள் தெரிவிக்கின்றன" என்று கூறினார். “இதை நன்றாக புரிந்து கொள்ள கூடுதல் ஆய்வுகள் தேவை.” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ALSO READ: Corona Side Effect: 40% நோயாளிகளுக்கு காதுகளில் buzzing ஒலி: UK ஆய்வு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR