Corona Virus: வதந்திகளும் கட்டுக்கதைகளும்... உண்மை என்ன?
கொரோனா என்ற நுண்கிருமி உலகையே அலற வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்த வைரஸின் பாதிப்பில் இருந்து தவிர்க்க பல்வேறு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதில் பல கட்டுக்கதைகளும் கலந்துள்ளன. அவற்றை தெரிந்துக் கொண்டு கவனமாக இருப்போம்...
புதுடெல்லி: கொரோனா என்ற நுண்கிருமி உலகையே அலற வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்த வைரஸின் பாதிப்பில் இருந்து தவிர்க்க பல்வேறு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதில் பல கட்டுக்கதைகளும் கலந்துள்ளன. அவற்றை தெரிந்துக் கொண்டு கவனமாக இருப்போம்...
COVID-19 பற்றிய உண்மைகள்
இப்போது உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளும் தகவல்களை உலகச் சுகாதார அமைப்பு வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் (COVID-19) பற்றிய பொதுவான, பொய்யான வதந்திகளைப் பற்றிய தெளிவை அந்த அமைப்பு மக்களுக்கு விளக்குகிறது.
நீங்கள் மருத்துவ முகக் கவசங்களை முறையாக அணியும்போது, ஆக்ஸிஜனை மிகக் குறைந்த அளவிலும் அல்லது கார்பன் டை ஆக்சைடை அதிக அளவிலும் சுவாசிக்க வைக்காது. மருத்துவ முகக் கவசங்கள் தட்டையான அல்லது மிருதுவான முகக் கவசங்களாகும். அவை அறுவை சிகிச்சை முகக் கவசங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. அவை தலையுடன் பட்டைகள் அல்லது முடிச்சுகள் மூலம் இணைக்கப்படுகின்றன. மருத்துவ முகக் கவசங்களை நீண்ட நேரம் அணிந்தால், அவை அசௌகரியமாக இருக்கும். ஆனால் அவை ஆக்ஸிஜனை மிகக் குறைந்த அளவிலும் அல்லது கார்பன் டை ஆக்சைடை அதிக அளவிலும் சுவாசிக்க வைக்காது.
மது அருந்துவதால் COVID-19 இலிருந்து உங்களைப் பாதுகாக்க முடியாது. அதிகப்படியான ஆல்கஹாலை உட்கொண்டால் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கக்கூடிய மற்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
வானிலை எவ்வளவு வெயில் அல்லது வெப்பமாக இருந்தாலும் உங்களுக்கு COVID-19 பாதிப்பு ஏற்படலாம். வெப்பமான வானிலை கொண்ட நாடுகளில் COVID-19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
காரமான மிளகாய் சாப்பிடுவதால் COVID-19 நோய்த்தொற்றைக் குணப்படுத்தவோ தடுக்கவோ முடியாது. அவற்றால் COVID-19 நோய்த்தொற்றைக் குணப்படுத்தவோ தடுக்கவோ முடியாது.
COVID-19 நோய்த்தொற்றைக் குணப்படுத்தவோ, சிகிச்சையளிக்கவோ அல்லது தடுக்கவோ எந்த மருந்துகளும் நிரூபிக்கப்படவில்லை. பல மருந்துகள் பரிசோதிக்கப்பட்டாலும், எந்தவொரு மருந்தும் COVID-19 நோய்த்தொற்றைக் குணப்படுத்தவோ தடுக்கவோ முடியும் என்பதற்கு தற்போது எந்த ஆதாரமும் இல்லை.
நுண்ணுயிர் எதிர்ப்பிகள் என்பது பாக்டீரியாக்களுக்கு எதிராக மட்டுமே செயல்படும், வைரஸ்களுக்கு எதிராக அல்ல. COVID-19 வைரஸ் தொற்றால் பரவுகிறது. COVID-19 ஆல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, அதே சமயத்தில் ஏற்படும் பாக்டீரியா நோய்தொற்றைக் குணப்படுத்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வழங்கப்படலாம்.
Also Read | News Tidbits செப்டம்பர் 17: இன்றைய சில முக்கியமான செய்திகள்...
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR