நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில், கொரோனா வைரஸால் இது வரை 60 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், இதுவரை 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

India Covid-19 Updates: கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது இந்த எண்ணிக்கை 60 லட்சத்தை எட்டியது, இதுவரை 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்து விட்டனர். இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 82 ஆயிரம் 170 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும்,  1,039 பேர் இந்த கொடிய வைரஸால்  இறந்துவிட்டனர் என்றும், சுகாதார அமைச்சகம் திங்கள்கிழமை காலை வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகள் கூறுகின்றன.



இதன் மூலம், கொரோனா தொற்றுநோய்களின் எண்ணிக்கை நாட்டில் 60,74,703 ஆக அதிகரித்துள்ளது, இதுவரை 95,542 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் தற்போது 9,62,640 ஆக்டிவ் நோயாளிகள். 5,01,6521 பேர் சிகிச்சையின் பின்னர் குணமாகியுள்ளனர்.


மேலும் படிக்க | சென்னை கோயம்பேடு காய்கறி மார்கெட் இன்று முதல் செயல்படத் தொடங்குகிறது..!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR