சென்னை கோயம்பேடு காய்கறி மார்கெட் இன்று முதல் செயல்படத் தொடங்குகிறது..!!

கோயாம்பேட்டில் இருந்து கொரோனா மின்னல் வேகத்தில் பரவத் தொடங்கியதை அடுத்து, மே முதல் வாரத்தில் இருந்து மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மார்கெட் திங்கள்கிழமை காலை (செப்.28) முதல் வணிகத்திற்காக மீண்டும் திறக்கப்பட உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 28, 2020, 10:14 AM IST
  • கோயம்பேடு சந்தை திங்களன்று மீண்டும் வணிகத்திற்காக திறக்கத் தயாராகி வருவதால், கார்ப்பரேஷன் ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டனர்.
  • கோயம்பேடு சந்தை மூடப்பட்டிருந்த இந்த இடைப்பட்ட காலத்தின் போது, சந்தை வளாகத்தில் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
  • வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பான விதிகளை சில விற்பனையாளர்கள் எதிர்க்கின்றனர், சிலர் ஆதரிக்கின்றனர்.
சென்னை கோயம்பேடு காய்கறி மார்கெட் இன்று முதல் செயல்படத் தொடங்குகிறது..!! title=

கோயாம்பேட்டில் இருந்து கொரோனா மின்னல் வேகத்தில் பரவத் தொடங்கியதை அடுத்து, மே முதல் வாரத்தில் இருந்து மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மார்கெட் திங்கள்கிழமை காலை முதல் வணிகத்திற்காக மீண்டும் திறக்கப்பட உள்ளது. கடைகளை சுத்தம் செய்வதற்கும், விற்பனையை தொடக்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும் விற்பனையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

கோயம்பேடு சந்தை திங்களன்று மீண்டும் வணிகத்திற்காக திறக்கத் தயாராகி வருவதால், கார்ப்பரேஷன் ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டனர்

கோயம்பேடு சந்தை மூடப்பட்டிருந்த இந்த இடைப்பட்ட காலத்தின் போது, சந்தை வளாகத்தில் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இங்கிருந்து தொற்றுநோய் மீண்டும் பரவுவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. கூட்டத்தைத், தனிப்பட்ட வகையில் சிறிய அளவில், காய்கறி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அனுமதி இல்லை.  மொத்த விற்பனைக்கு மட்டுமே அனுமதி குறைந்தபட்ச கொள்முதல் அளவு 50 கிலோ என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பான விதிகளை சில விற்பனையாளர்கள் எதிர்க்கின்றனர், சிலர் ஆதரிக்கின்றனர்

மே 5 ஆம் தேதி வளாகம் மூடப்பட்ட பின்னர் காய்கறி சந்தை திருமழிசைக்கு மாற்றப்பட்ட காலகட்டத்தில், கோயபேடு கடைகளுக்கு புதிய வண்ணப்பூச்சு பூசுவது, வடிகால் அமைப்பை மீண்டும் ஏற்படுத்துவது, குளியலறைகளை சரிசெய்வது மற்றும் சாலைகளை மீண்டும் போடுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது நிறைவடைந்துள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள கோயம்பேடு காய்கறி கடை சந்தைக் கழகத்தின் தலைவர் ஜி.டி.ராஜசேகரன் கூறுகையில், சுமார் 2,000 விற்பனையாளர்கள் சந்தைக்குத் திரும்பி விற்பனையை தொடக்க உள்ளனர். அல்ட்ராரெட்  தெர்மோமீட்டர்கள், சானிடைசர்கள் மற்றும் பல்ஸ் ஆக்சிமீட்டர்களை தங்கள் கடைகளுக்குள்ளும் வாடிக்கையாளர்களுக்காகவும் கட்டாயம் வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க | மறவாதீர்கள்.. ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான கடைசி நாள் செப்.30..!!!

50 கிலோவிற்கு மேல் என்ற அளவில் காய்கறி வாங்குபவர்களுக்கு மட்டுமே நுழைவு அனுமதி இருக்கும். அதை விட குறைவான எந்த அளவிற்கும் விற்பனை இருக்காது. மொத்தமாக வாங்குபவர்களுக்கு மட்டுமே நுழைவு அனுமதிக்கப்படும், மேலும் வருபவர்களின், உடல் வெப்ப நிலை மற்றும் ஆக்ஸிஜன் அளவு நுழைவாயிலில் சோதிக்கப்பட வேண்டும். கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் டிரக் டிரைவர்கள் போன்ற அனைத்து சந்தை ஊழியர்களுக்கும்  நுழைவிற்கான பாஸ்கள் வழங்கப்படும்.

மேலும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுத்தம் மற்றும் சுத்திகரிப்புக்காக சந்தை மூடப்படும். சந்தை நேரங்களும் மாறிவிட்டன, விற்பனைக்காக அதிகாலை 1 மணி முதல் காலை 9 மணி வரை திறந்திருக்கும்.அனைத்து விற்பனை நடவடிக்கை மதியம் 1 மணிக்கு மேல் இருக்காது, இருப்பினும் மாலை கடைகளுக்கான காய்கறி சப்ளை, கணக்கு நோக்கங்களுக்காக நுழைவு  அனுமதிக்கப்படும் என கூறப்படுகிறது.

சந்தையில் ஒரு சுகாதார முகாம் அமைக்கப்படும், அங்கு உடல் வெப்பநிலை மற்றும் ஆக்ஸிஜன் அளவை சரிபார்க்க முடியும். எந்தவொரு நபரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளும் இருக்கும். கூட்டத்தை கண்காணிக்க சுமார் 80 சி.சி.டி.வி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | தேர்தலுக்காக திமுக கையில் எடுக்கும் இந்தி எதிர்ப்பு உத்தி... கை கொடுக்குமா... காலை வாருமா...!!!

திருமழிசையில் தற்காலிகமாக வர்த்தகத்தை மேற்கொண்ட பலர் இழப்பை சந்தித்த பின்னர், கோயம்பேடு சந்தை வளாகத்திற்கு திரும்புவதில் பலர் மகிழ்ச்சியடைகிறார்கள்.  திருமழிசையில், குறைவான கடைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. மேலும், மழையின் போது சந்தை தண்ணீர் வரும். சரியான வசதிகள் இல்லாததால் மழை பெய்தாலோ, அடும் வெயில் இருந்தாலோ, விற்பனை பாதிக்கப்பட்டது.

இருப்பினும், கோயம்பேடுவில் வாடகை செலவைச் எவ்வாறு சாமளிப்பது குறித்து சிலர் கவலைப்படுகிறார்கள். கடந்த சில மாதங்களில் இருந்ததைப் போல விற்பனை பாதிக்கப்பட்டால்,  வாடகை மற்றும் ஊழியர்களும் சம்பளம் வழங்குவது போன்றவற்றில் சிரமம் ஏற்படும் என்று சில விற்பனையாளர்கள் கருதுகின்றனர்.

Trending News