Covaxin என்னும் கொரோனா தடுப்பு மருந்தை சருமத்தில் செலுத்தி பரிசோதிக்க அரசு ஒப்புதல்..!!!
covaxin தடுப்பு மருந்தை சருமத்தின் கீழ் செலுத்தி பரிசோதிக்கும் முறை வெற்றி பெற்றால், அதன் விலை பெருமளவு குறையும்
புதுடெல்லி (New delhi): பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள கோவிட் 19 தடுப்பு மருந்தை சருமத்தில் செலுத்தி (intradermal) பரிசோதிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, தசைகளில் அதாவது intramuscular முறையில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், Covaxin என்னும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை சருமத்தின் கீழ் செலுத்தி பரி சோதிக்க இரு நிபந்தனைகளை விதித்துள்ளது.
முதலாவது, பரிசோதனையில் பங்கேற்பவர்களுக்கு, மருத்துவ மற்றும் ஆன்டிபாடி தொடர்பான பரிசோதனையை ஆறு மாதங்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இரண்டாவதாக, இந்த பரிசோதனை தசைகளில் செலுத்தி பார்க்கபட்ட பரிசோதனையில் இருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும்.
கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் மற்றும் புனேவில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய வைராலஜி நிறுவனம் இணைந்து உருவாக்கியது.
புது தில்லி மற்றும் பாட்னாவில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் , விசாகப்பட்டினத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனை, ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் மருத்துவ அறிவியல் கழகம் மற்றும் ரோஹ்தக்கில் பிஜிஐஎம்எஸ் (PGIMS) உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 12 மருத்துவமனைகளில் 1,125 நோயாளிகளுக்கு கோவாக்சின் தடுப்பு மருந்தின் முதல் கட்ட அல்லது இரண்டாவது கட்ட பரிசோதனையை பாரத் பயோடெக் தற்போது நடத்தி வருகிறது.
இன்ட்ராடெர்மல், அதாவது சருமத்தின் கீழ் செலுத்தி பரிசோதிப்பது, இன்ட்ராமஸ்குலராக அதாவது தசைகளில் செலுத்தி பரிசோதிப்பதை விட குறைவான அளவே தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த மருந்து சருமத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டால், நாம் தயாரிக்கும் தடுப்பு மருந்தை அதிகமான பேருக்கு வழங்கலாம் என்பதோடு, தடுப்பூசியின் விலையும் குறையும்.
ALSO READ | ப்ரீதலைசர் சோதனை மூலம் COVID-19 தொற்றை நொடியில் கண்டறிய முடியும்!!
எடுத்துக்காட்டாக, ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசியை எடுத்துக் கொண்டால், இன்ட்ராடெர்மல் தடுப்பூசியாக அதனை பயன்படுத்தும் போது, 60-80% என்ற்அ அளவிற்கு தடுப்பு மருந்தின் பயன்பாடு குறைகிறது. அதனால், குறைந்த செலவு மற்றும் தடுப்பூசி பற்றாக்குறையும் ஏற்படாது என WHO ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.