Coronavirus Updates : சற்று வேகம் குறைந்த கொரோனா; 3.23 லட்சம் புதிய பாதிப்புகள்
பல நாட்களாக உச்ச அளவை தொட்ட கொரோனாவின் வேகம் இன்று சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் 3.23 லட்சம் புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
Coronavirus Updates: கொரோனா புதுப்பிப்புகள்: கொரோனாவின் வேகத்தில் சிறிது குறைவு, 3.23 லட்சம் தொற்று மற்றும் 2,771 பேர் கடந்த 24 மணி நேரத்தில் இறந்தனர்
பல நாட்களாக உச்சத்தை தொட்டு வந்த கொரோனா தொற்று பரவல் வேகம் செவ்வாய்க்கிழமை சற்று குறைந்தது. கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் 3.23 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன.
கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் (India) தொடர்ந்து, தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், இன்று அதன் வேகம் சற்றே குறைந்துள்ளது. கடந்த 6 நாட்களாக நாட்டில் தினமும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய வழக்குகள் பதிவாகின்றன. கொரோனா பரவலை கட்டுபடுத்த நாட்டின் பல மாநிலங்களில் லாக்டவுன் போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன. அதற்கு பலன் கிடைத்துள்ளதைப் போல் தோன்றுகிறது.
இன்று கொரோனா பாதிப்பு சிறிது குறைவாக காணப்படுகிறது, இருப்பினும் இந்த எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் அதிகம் என்ற அளவில் தான் உள்ளது.
ALSO READ | ரஷ்யாவின் Sputnik V இந்தியாவிற்கு விரைவில் வருகிறதா; ரஷ்ய முதலீட்டு நிதியம் தகவல்
பல நாட்களாக உச்ச அளவை தொட்ட கொரோனாவின் வேகம் இன்று சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் 3.23 லட்சம் புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், 2700 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். நேற்று, 3.53 லட்சம் புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. நேற்று பதிவான இறப்பு எண்ணிக்கை 2800.
கடந்த 24 மணி நேரத்தில் 3,23,144 புதிய கொரோனா கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன என சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை கூறுகிறது, இந்த காலகட்டத்தில் 2771 பேர் இறந்தனர். இதன் மூலம், நாட்டில் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,76,36,307 ஆக உயர்ந்துள்ளது, இதுவரை 1,97,894 பேர் இந்த கொடிய வைரஸால் இறந்துவிட்டனர். இந்தியாவில் தற்போது கொரோனா நோய் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 28,82,204.தொற்றால் பாதிக்கப்பட்ட 1,45,56,209 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
ALSO READ | கொரோனா நோயாளிகள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் Prone Positioning
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR