ரஷ்யாவின் Sputnik V இந்தியாவிற்கு விரைவில் வருகிறதா; ரஷ்ய முதலீட்டு நிதியம் தகவல்

கொரோனா பரவலை தடுக்க, தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என உள்ள நிலையில், ஏற்கனவே இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற 2 வகையான தடுப்பூசிகள்  பயன்பாட்டில் உள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 27, 2021, 09:12 AM IST
  • கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
  • தினசரி தொற்று பாதிப்பு 3.5 லட்சம் என்ற அளவில் உள்ளது.
  • மே ஒன்றாம் தேதியிலிருந்து, 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) செலுத்திக்கொள்ளலாம்
ரஷ்யாவின் Sputnik V இந்தியாவிற்கு விரைவில் வருகிறதா; ரஷ்ய முதலீட்டு நிதியம் தகவல் title=

கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தினசரி தொற்று பாதிப்பு 3.5 லட்சம் என்ற அளவில் உள்ளது. 

கொரோனா பரவலை (Corona Virus) தடுக்க, தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என உள்ள நிலையில், ஏற்கனவே இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற 2 வகையான தடுப்பூசிகள்  பயன்பாட்டில் உள்ளன. 

இந்தியாவில் கொரோனா பரவல் நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டும் வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மே ஒன்றாம் தேதியிலிருந்து, 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்நிலையில்,  ரஷ்யாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ஸ்பூட்னிக் -V  (Sputnik-V ) தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு மருந்துப் பொருட்கள் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI)  கடந்த ஏப்ரல் 13ம் தேதி அனுமதி வழங்கியது. 

ALSO READ | கொரோனா நோயாளிகள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் Prone Positioning

COVID-19 க்கு எதிரான ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் முதல் தொகுதி மே 1 ஆம் தேதி இந்தியாவிற்கு அனுப்பப்படும் என்று ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைவர் கிரில் டிமிட்ரிவ் (Kirill Dmitriev) , ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

எனினும் முதல் தொகுதியில் எத்தனை தடுப்பூசிகள் இருக்கும் அல்லது அவை எங்கு தயாரிக்கப்படும் என்பது குறித்து அவர் எதுவும் கூறவில்லை.

உலகளவில் ஸ்பூட்னிக் V  விற்பனை செய்யும் ரஷ்யாவின் RDIF இறையாண்மை  நிதியம், ஏற்கனவே இந்தியவின் ஐந்து முக்கிய உற்பத்தி நிறுவனங்களுடன் ஆண்டுக்கு 850 மில்லியன் டோஸ் தடுப்பூசியை தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொற்றுநோயின் இரண்டாவது அலையின் பிடியில் சிக்கியுள்ள இந்தியாவிற்கு, பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகள் அவசர மருத்துவ உதவியை அனுப்புவதாக உறுதியளித்துள்ளன.

ALSO READ | Sputnik-V தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News