அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் COVID-19 தடுப்பூசி 70 சதவீத தடுப்பாற்றலை கொண்டுள்ளது என அறிவித்துள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அஸ்ட்ராஜெனெகாவின் ஆரம்ப சோதனை முடிவுகள் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பாகும். கிட்டத்தட்ட 1.4 மில்லியன் மக்களைக் கொன்று உலகப் பொருளாதாரத்தை உலுக்கிய ஒரு தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒரு புதிய முன்னேற்றத்தை இது குறிக்கிறது.


பிரிட்டிஷ் மருந்துகள் குழுவான, அஸ்ட்ராஜெனெகா  AstraZeneca  மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கோவிட் -19 க்கு எதிராக இணைந்து உருவாக்கிய தடுப்பூசி  பரிசோதனைகளில், தடுப்பு மருந்து சராசரியாக 70 சதவிகித தடுப்பாற்றலை கொண்டுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.


"இந்த தடுப்பூசியின் செயல்திறன் கொண்டதோடு,  பாதுகாப்பான மருந்தாகவும் இருக்கும். கோவிட் -19 க்கு எதிராக செயல்படுவதில்  மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதையும், இந்த பொது சுகாதார அவசரநிலையை சீர் செய்வதில் உடனடி பலனை அளிக்கும் என்பதையும் உறுதிப்படுத்துகிறது" என்று அஸ்ட்ராஜெனெகா தலைமை நிர்வாகி பாஸ்கல் சொரியட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இருப்பினும், தடுப்பூசி தயாரிப்பதில் போட்டியாளர்களான ஃபைசர் / பயோஎன்டெக் மற்றும் மாடர்னா ஆகியோரால் தயாரிக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது இது குறைவான சராசரி தடுப்பாற்றலை கொண்டுள்ளது.  அவை 90 சதவீதத்திற்கு மேல் தடுப்பாற்றலை கொண்டுள்ளன.


ALSO READ | கிறிஸ்துமஸுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி... Pfizer-BioNTech அறிவிப்பு..!!!


நவம்பர் முதல் வாரத்தில், அமெரிக்காவின் பைசர் (Pfizer) மற்றும் ஜெர்மனியின் பயோஎன்டெக் (BioNTech)  மருந்து நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து 90 சதவிகித வெற்றி அடைந்து விட்டதாக அறிவித்துள்ள  Pfizer நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், இதன் மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக குறிப்பிட்டார். 


சென்ற வாரம் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை தயாரித்து வரும் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம், அதன் தடுப்பூசி, 94.5 சதவிகித ஆற்றல் கொண்டது எனக் கூறி ஆய்வு முடிவுகளை வெளியிட்டது. 


இப்போது, பைசர் மற்றும் மாடர்னாவின் தடுப்பூசி இரண்டும் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதில் வெற்றி அடைந்தால், டிசம்பர் மாதத்திற்குள் அமெரிக்காவிடம், கொரோனாவிற்கு எதிரான இரண்டு தடுப்பூசி இருக்கும். மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் 60 மில்லியன் அளவிலான தடுப்பூசி தயாரிக்கப்படலாம்


ALSO READ | COVID-19 தடுப்பூசி பரிசோதனையில் பாதகமான நிகழ்வா.. Bharat Biotech கூறுவது என்ன..!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR