இந்தப் புத்தாண்டில் மக்களுக்கு ஓர் நற்செய்தி ஆக, இந்தியாவில்  வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 கொரோனா வைரஸ்  தடுப்பூசியின் அவசர பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை அடுத்து,  அதுவும் மக்களுக்கு நம்பிக்கை வைத்துள்ளது.


 இந்தியாவில்  தினசரி புதிதாக பதிவாகும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தினமும் 20 ஆயிரத்திற்கும் குறைவான அளவிலேயே கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் பதிவாகின்றன. 


புதிதாக பதிவாகும் தொற்று பாதிப்புகளை விட  குணமடையும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


 கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 19,078 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.  குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 22,920 ஆக உள்ளது.



 அக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 2.5 லட்சம் என்ற அளவில் உள்ளது.


 ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கையில் 62%,  கேரளா மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


புத்தாண்டில்,  கடந்த 7 நாட்களில்  மிகக் குறைந்த அளவு பதிவாகியுள்ளது  என்ன சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.


இந்தியாவில், மொத்த தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை  1 கோடியை தாண்டியது.    மொத்தம், 1,03,05,788 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை,  மொத்தம் 96,06,387. 


 ALSO READ | சாதனை அளவை எட்டியது GST வசூல்... 2020 டிசம்பரில் ₹1.15 கோடி வசூல்..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR