இந்தியவில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் (Corona virus)  தொற்று,  86821 பேருக்கு ஏற்பட்டுள்ளது, 1,181 பேர் இரந்து விட்டனர். கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  63 லட்சசத்தை தாண்டியுள்ளது. இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 98,665 ஆக அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் (India), தொடர்ச்சியாக பத்தாவது நாளாக,  கொரோனா வைரஸ் புதிய பாதிப்புகள் எண்ணிக்கை 90,000 தையும் விட குறைவாக உள்ளது. முன்னதாக செப்டம்பர் 19 அன்று, 92574 நோயாளிகள் புதிதாக பாதிக்கப்பட்டனர்.


இந்தியவில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று,  86821 பேருக்கு ஏற்பட்டுள்ளது, 1,181 பேர் இரந்து விட்டனர். கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  63 லட்சசத்தை தாண்டியுள்ளது. இரந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 98,665 ஆக அதிகரித்துள்ளது.


அதே நேரத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 80,419 பேர் குணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது,  இதுவரை, கொரோனாவிலிருந்து மொத்தம் 52 லட்சம் 73 ஆயிரம் 202 பேர் குணமாகியுள்ளனர். தற்போது, ​​நாட்டில் 9,40,705  ஆக்டிவ் பாதிப்புகள் உள்ளன.


செப்டம்பர் மாதத்தில், மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால்,  26.24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தொற்று எண்ணிக்கையில், 41 சதவீதமாகும். கடந்த மாதம் ஆகஸ்டில், கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 19.87 லட்சம் என்ற அளவில் இருந்தது.


ALSO READ | இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்துக்கான காத்திருப்பு எப்போது முடிவுக்கு வரும்.. !!!


கொரோனாவினால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில்,  மகாராஷ்டிரா, ஆந்திராவுக்குப் பிறகு கர்நாடகா மூன்றாவது மாநிலமாக உள்ளது, அங்கு 6 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன.


மகாராஷ்டிராவில் புதன்கிழமை 18,317 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை 13,84,446 ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை, 481 பேர் இறந்தனர். இதை அடுத்து இறந்தவர்களின் எண்ணிக்கை 36,662 ஆக உயர்ந்துள்ளது. 


டெல்லியில் புதன்கிழமை 3,390 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன, 41 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,79,715 ஐ எட்டியுள்ளது. இவர்களில் 2,47,446 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ள நிலையில், 5,361 பேர் இறந்துள்ளனர். தற்போது தலைநகரில் 26,908 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளன.


உலகில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 40  லட்சத்தை தாண்டியுள்ளது. அதே நேரத்தில், குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 2 கோடி 53 லட்சம் என்பது நிம்மதியான விஷயம். இறப்பு எண்ணிக்கை 10.16 லட்சத்தை தாண்டியுள்ளது.


ALSO READ | நமக்கு ஏன் வியர்க்கிறது... வியர்வைக்கும் நோய்க்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா..!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR