COVID 19 Updates: மொத்த பாதிப்பு சுமார் 64 லட்சம்; 1 லட்சத்தை நெருங்கும் இறப்பு எண்ணிக்கை
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 81,484 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது நாட்டின் எண்ணிக்கை 64 லட்சத்தை நெருங்கியுள்ளது. மறுபுறம், கொடிய தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 1,095 பேர் உயிர் இழந்ததை அடுத்து, இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குகிறது
புதுடில்லி: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 81,484 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது நாட்டின் எண்ணிக்கை 64 லட்சத்தை நெருங்கியுள்ளது. மறுபுறம், கொடிய தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 1,095 பேர் உயிர் இழந்ததை அடுத்து, இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குகிறது
கடந்த 24 மணி நேரத்தில் 81,484 புதிய பாதிப்புகள் மற்றும் 1,095 இறப்புகள் என எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவின் மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 63,94,069 என்ற அளவை எட்டியுள்ளது. இதில் 9,42,217 பேர் ஆக்டிவ் நோயாளிகள். 53,52,078 பேர் குணமடைந்தனர். மொத்தம் 99,773 பேர் இறந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குணமடையும் விகிதம் 83.53 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில், இறப்பு விகிதம் 1.56 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆறுதல் அளிக்கும் விஷயம் ஆகும்
மேலும் படிக்க | பாவங்களை போக்கும் கங்கை கொரோனாவையும் போக்குமா... நிபுணர் குழு ஆய்வு..!!!
உலகளாவிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சத்தை தாண்டியுள்ளது, அதே நேரத்தில் இறப்புகள் 10,21,700 க்கும் அதிகமாகிவிட்டதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3,42,00,662 ஆகவும், இறப்புக்கள் 10,21,709 ஆகவும் அதிகரித்துள்ளன.
உலகின் மிக அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் மற்றும் இறப்புகள் என அமெரிக்கா மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு. அங்கு மொத்த பாதிப்பு 72,77,352 மற்றும் இறப்பு எண்ணிக்கை 2,07,791. இந்தியா இரண்டாவது இடத்தில் 63,12,584 என்ற அளவில் உள்ளது. ஆனால் இறப்பு எண்ணிக்கை குறைவு என்பதோடு, குணமடையும் விகிதமும் அதிகமாக உள்ளது. இந்தியாவில் இறப்பு எண்ணிக்கை 98,678 ஆகவும் உயர்ந்துள்ளது.
மேலும் படிக்க | நமக்கு ஏன் வியர்க்கிறது... வியர்வைக்கும் நோய்க்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா..!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR