Crocodile Tears Syndrome: ஒரு நபர் உணவை உண்ணும் போது அழத் தொடங்கும் ஒரு தனித்துவமான நோய்,  தொடர்பாக ஆச்சரியமான தாகவல்களை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரோக்கடைல் டியர்ஸ் சிண்ட்ரோம் (Crocodile Tears Syndrome) என்பது ஒரு நோயாகும், இதில் ஒரு நபர் உணவு அல்லது தண்ணீர் குடித்த பிறகு அழத் தொடங்குகிறார்.


ஆனால், அழுவதும், கண்களில் நீர் வடிவதும் இயற்கையானது தானே? அதுவும் சாப்பிட்ட உணவு காரமாக இருந்தால் கண்ணில் நீர் வராதா என பல கேள்விகள் எழலாம்.


மேலும் படிக்க | திருடும் ஆர்வத்தை தூண்டும் கிளெப்டோமேனியா என்னும் உளவியல் நோய்


பொதுவாக ஒருவித வலியை உணரும்போதும், சில சமயங்களில் மகிழ்ச்சியாக இருக்கும்போதும், ​​​​கண்களில் நீர் வடிகிறது, ஆனால் சாப்பிடும் போது அழத் தொடங்கும் நபரைப் பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 


அது குழந்தைகள் செய்யும் வேலை என்று சொல்ல வேண்டாம். உண்மையிலேயே உணவை வாயில் வைத்தவுடன் அழத் தொடங்கும் நோய் உள்ளவர்களும் உலகில் இருக்கிறார்கள்.  


அவர்களின் அழுகைக்கும் உணவின் சுவைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதேபோல, காரமான உணவை சாப்பிட்டதாலும் இந்த கண்ணீர் வருவதில்லை.  க்ரோக்கடைல் டியர்ஸ் சிண்ட்ரோம் என்ற தனித்துவமான நோயால், சிலருக்கு வாயில் உணவில் வைத்தவுடனே, கண்களில் இருந்து நீர் வழியும்.  


மேலும் படிக்க | அளவிற்கு அதிகமான முட்டை நீரிழிவு நோய் அபாயத்தை அதிகரிக்கிறதா


க்ரோக்கடைல் சிண்ட்ரோம் என்றால் என்ன?
குரோக்கடைல் சிண்ட்ரோம் என்ற நோயின் பின்னணியில் உள்ள காரணம் லாக்ரிமல் சுரப்பியில் மோசமான விளைவு ஏற்படுவது தான். இந்த சிக்கல் இருப்பவருக்கு, சாப்பிடும் போது நபர் கட்டுப்பாட்டை இழந்து, கண்களில் இருந்து நீர் வடியும். 


இதற்க்கு, கஸ்டோ-லாக்ரிமேஷன் என்றும் அழைக்கப்படுகிறது. தகவல்களின்படி, உலகில் இதுவரை 95 பேர் இந்த நோய்க்குறியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


சமீபத்தில், Oddity Central என்ற இணையதளத்தில் வெளியான செய்தியின்படி, சீனாவில் ஜாங் என்ற நபரும் இந்த அரிய நோய்க்குறியால் பாதிக்கப்பட்டுள்ளார். உணவு உண்ணும் போது ஜாங் அழத் தொடங்குகிறார்.


மேலும் படிக்க | பழம் சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்க கூடாது; எச்சரிக்கும் நிபுணர்கள்..!!


இந்த நோய் பற்றி கூறும் அவர், 'நான் ஹோட்டல், ரெஸ்டாரன்ட்களில் சாப்பிட வெளியே செல்லும்போதெல்லாம் என் கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்துவிடும். இதனால் நான் வெட்கப்பட்டேன். முதலில் என் இயல்பினால் இப்படி நடக்குமோ என்று நினைத்தேன் ஆனால் இதை டாக்டரிடம் சொன்ன போது தான் நான் க்ரோக்கடைல் சிண்ட்ரோம் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.


ஜாங் இதற்கு முன்பு 'முக முடக்குதலால்' (facial paralysis) பாதிக்கப்பட்டிருந்தார். அவர், மெதுவாக குணமடைந்து வருகிறார். நோயில் இருந்து மீளும்போது, அவருடைய முக நரம்புகளின் திசை மாறியது,


அதனால் அவருடைய வாயில் உணவை வைக்கும்போது, எச்சில் ஊறுவதற்கு பதிலாக, கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது. இந்த விசித்திரமான நோய்க்குறி பற்றி அறிந்த மருத்துவர்களும் ஆச்சரியப்படுகிறார்கள்.


மேலும் படிக்க | முகத்தின் அழகை சீர்குலைக்கும் ‘கருவளையங்களை’ விரட்ட சில எளிய டிப்ஸ்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR