தலையின் அழகே ஒருவரின் அழகான தோற்றத்தை தீர்மானிக்கிறது என்று சொல்லலாம். தலைமுடி அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், மோசமான வாழ்க்கை முறை மற்றும் மாறிவரும் தண்ணீர் காரணமாக, இன்று பெரும்பாலானவர்களுக்கு முடி தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வருவதை பார்க்க  முடிகிறது.


ஒருவரின் தலைமுடி இளம் வயதிலேயே அதாவது வழக்கத்திற்கு முன்னதாகாவே கொட்ட ஆரம்பித்தால் முடியழகு குறைந்து போகும். அதுமட்டுமல்ல, நரைமுடி, அதிக எண்ணெய்ப்பசை கொண்ட முடி, வறண்ட முடி என முடி தொடர்பான பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம்.


முடிப் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் நமது வீட்டில் உள்ள பொருட்களிலும், உணவிலுமே உள்ளது. தயிர், சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. அது முடிக்கும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?


உண்மையில் கூந்தல் மிகவும் வறண்டு காணப்படுபவர்கள், தயிரை கூந்தலில் தடவினால் நல்ல பயன் பெறலாம். ஆனால் தயிரை எப்போது, எவ்வளவு நேரம் தலைமுடியில் தடவ வேண்டும் என்பது முக்கியமான விஷயம்.


மேலும் படிக்க | வாழைப்பழத்தின் உதவியுடன் முடிக்கு கெரட்டின் கிரீம் தயாரிக்கலாம்


தயிரை எப்படி பயன்படுத்தினால், அது தலைமயிருக்கு நன்மை பயக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.


தலைமுடியில் எவ்வளவு நேரம் தயிர் தடவ வேண்டும்?
தயிரை 30 நிமிடங்கள் முடியில் தடவினால் போதும், தயிரின் பலன்கள் குறைந்த நேரத்திலேயே தெரிந்துவிடும். எனவே, நீண்ட நேரம் தடவினால்தான் அதிக பலன் கிடைக்கும் என்பது தவறான நம்பிக்கை.


தலையில் தயிரைப் பூசி அரை மணி நேரம் ஊறவிட்டு, அதன்பிறகு சாதாரண நீரில் முடியைக் கழுவினால் போதும். குறைந்தது வாரத்திற்கு ஒருமுறை தயிரை தலைமுடியில் தடவி வந்தால், முடி பளபளப்பாக இருப்பதோடு, வளர்ச்சியும் அதிகரிக்கும்.



கூந்தலில் தயிர் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்


தலைமுடி மிகவும் வறண்டு இருப்பவர்கள் கண்டிப்பாக தயிரை சாப்பிட வேண்டும். அதோடு, வாரம் இருமுறை தலைக்கு தயிர் ட்ரீட்மெண்ட் கொடுக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்துவந்தால், தலைமுடி அழகாக மாறுவதோடு, உடல் சருமமும் அழகாக மாறும்.


தலைமுடி வளர்ச்சியை துரிதப்படுத்திலும் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது. வாரம் ஒருமுறை தயிரை தலையில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


பொடுகு பிரச்சனைக்கும் தயிர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தலையில் பொடுகு அதிகமாக இருந்தால் கண்டிப்பாக தயிரை தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து  கழுவுவது நல்ல பலனளிக்கும்.


நரைமுடி பிரச்சனைக்கும் தயிர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இளநரையால் முடி வெள்ளையாக மாறுபவர்களும், தயிரை பேஸ்டைப்போல தலையில் தடவி, சிறிது நேரம் ஊறவிட்டு கழுவலாம். 


தயிரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உணவாக உடலுக்குள் வேலை செய்தால், தலையில் போடப்படும் தயிர் வெளிப்புறமிருந்து வேலை செய்து அழகை மேம்படுத்தும். தயிரை  தலையில் தடவி இந்த குறிப்பை முயற்சித்துப் பார்த்து பயனடையவும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ நியூஸ் இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR