குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மக்ரோனி மற்றும் சீஸ் தடை செய்யப்பட்ட பதாலெட்ஸ் ரசாயனம் கலந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சீஸ் மூலம் தயாரிக்கப்படும் 30 வகையான உணவு பொருட்களின் மீது நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பதாலெட்ஸ் ரசாயனம் ஆண் வளர்ச்சிக்குரிய டெஸ்ட்டோஸ் டெரோன் எனப்படும் ஹார்மோனை பாதிக்கிறது. பதாலெட்ஸ் ரசாயன பொருள் கலந்த உணவு பொருட்களை சாப்பிடுவதன் மூலம் ஆண் குழந்தைகளின் பிறப்பு உறுப்பு வளர்ச்சி பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


மக்ரோனி மற்றும் சீஸ் சேர்த்து குழந்தைகளுக்கு விருப்பமான உணவு பதாலெட்ஸ் ரசாயன பொருள் கலந்து தயாரிக்கப்படுகிறது. எனவே இதனால் மக்ரோனி மற்றும் சீஸ் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.