Side Effects of Reusing Cooking Oil: சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவது பொதுவாக நாம் எல்லோரும் கடைபிடிக்கும் பொதுவான விஷயம். சுட்ட எண்ணெயை வீணாக்க விரும்பாததால் நம்மில் பலர் இதைச் செய்கிறோம். பொருட்களை வீணடிக்கக்கூடாது என்ற நம்முடைய எண்ணம் உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் என்பதை அறிந்தால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் உபயோகப்படுத்துவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் என்ன என்பதை தெரிந்துக் கொண்டால், இனி மறந்து கூட சுட்ட எண்ணெயை பயன்படுத்தமாட்டீர்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புற்றுநோய் ஏற்படும் அபாயம் 


பூரி, பக்கோடா, பட்சணங்கள் பொரிக்க பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெயை, பிறகு மீண்டும் பயன்படுத்தும் பழக்கம் இருப்பவர்கள் இந்த விஷயத்தில், கவனமாக இருங்கள். ஏனென்றால் பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. பயன்படுத்திய எண்ணெயை மீண்டு பயன்படுத்தும் போது அதனை, ஆரோக்கியத்தை (Health Tips) பாதிக்காத வகையில் சரியாகப் பயன்படுத்துவது முக்கியம். பயன்படுத்திய எண்ணெய்யை பயன்படுத்துவதற்கான சரியான வழி என்ன, எத்தனை முறை பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்வோம்...


சுட்ட எண்ணெய் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்


பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்கி, சமையலுக்கு பயன்படுத்தினால், உங்கள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கலாம். அதில் டிரான்ஸ் கொழுப்பு அளவு அதிகரிக்கிறது. இதற்குக் காரணம், எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்குவதன் மூலம், அந்த எண்ணெயில் ஃப்ரீ ரேடிக்கல் வளரத் தொடங்குகின்றன. அதோடு எண்ணெயில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் குறைந்து விடும். இது மட்டுமின்றி, மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதால் அதில் உள்ள அமிலத்தின் அளவும், சில நச்சுப் பொருட்களின் அளவும் அதிகரிப்பதன் காரணமாக, வயிற்றுப் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. அதில் டிரான்ஸ் கொழுப்பு அளவு அதிகரிக்கிறது.


மேலும் படிக்க | உடம்புக்கு ரொம்ப முடியலையா... இந்த 6 ஜூஸ் குடித்தால் ஜம்முனு இருக்கும்!


உணவின் தரம் மற்றும் சுவையில் ஏற்படும் பாதிப்பு


மீண்டும் சூடுபடுத்தப்பட்ட எண்ணெயில் உணவைச் சமைப்பது ஆரோக்கியத்தில் பல வகையில் தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சுட்ட எண்ணெயால் சமைக்கப்பட்ட உணவுக்கும், புதிதாக பயன்படுத்தப்படும் எண்ணெயில் சமைக்கப்படும் உணவுக்கும் உள்ள சுவையில் வித்தியாசம் இருக்கும். சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவது, உணவின் தரம் மற்றும் சுவையை மட்டுப்படுத்துவதோடு, உடலுக்கு தீங்கும் ஏற்படுத்தும். இதன் காரணமாக, வயிற்று புற்றுநோய், பித்தப்பை புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் மற்றும் பிற வகையான நோய்கள் வரலாம்.


இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் சுட்ட எண்ணெய்


சுட்ட எண்ணெயை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவை உட்கொள்வதன் மூலம், உடல் பருமன் அதிகரிக்கும். எண்ணெயை நன்றாக சூடாக்கும்போது அதில் உள்ள சில கொழுப்புகள் டிரான்ஸ் கொழுப்புகளாக மாற்றப்படுகின்றன.எனவே, முடிந்தவரை ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சூடாக்கி பயன்படுத்த வேண்டாம். சுட்ட சமையல் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவைப் உண்பதால், அதில்கொழுப்பு நிறைந்தது. இதன் காரணமாக இதய நோய்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. 


சுட்ட எண்ணெயை பயன்படுத்தும் சரியான வழி


முதலில் சுட்ட எண்ணெயை நன்கு வடிகட்டி, பின்னர் குறைந்த அளவில் சூடாக்கி பயன்படுத்தலாம். அதாவது சுட்ட எண்ணெயை தோசை சுடுதல், சப்பாத்தி செய்தல், காய்கறிகளை சமைத்தல் போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். எனினும் அதன் சுவையில் சிறிது மாற்றம் இருக்கும். சுட்ட எண்ணெயை மீண்டும் பொரிப்பதற்கு பயன்படுத்தக் கூடாது. 


பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | மூளை ஜெட் வேகத்தில் வேலை செய்ய... நினைவாற்றலை அதிகரிக்கும் சூப்பர் உணவுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ