வெள்ளை முடிக்கு வைட்டமின் பி சிறந்த தேர்வாகும்: பல தசாப்தங்களுக்கு முன்பு, 40 வயதைத் தாண்டியவர்களின் தலையில் நரை முடி ஏற்படத் தொடங்கும், ஆனால் தற்போது நரை முடிக்கும் வயதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்களின் கூந்தலில் அதிக வெண்மை காணப்படுகிறது. அதனால் தான் இளம் வயதினருக்கு தலைமுடி கூட வெள்ளையாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட ஆரம்பித்துவிட்டது. எனவே நீங்களும் இந்தப் பிரச்சனையைத் தவிர்க்க விரும்பினால், உடலில் இந்த குறிப்பிட்ட சத்து குறையாமல் இருக்க வேண்டாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆரோக்கியமான உணவுகளால் முடிக்கு ஊட்டம் கிடைக்கும்
தினசரி உணவை ஒழுங்கான முறையில் சாப்பிட்டால், வெள்ளை முடி பிரச்சனை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை, சிலருக்கு மரபணு காரணங்களால் இந்த பிரச்சனை இருந்தாலும், பொதுவாக ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமே உண்மையான காரணமாகும். அத்தகைய சூழ்நிலையில், வைட்டமின் பி அதிகம் உள்ள உணவை நீங்கள் சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனையை தவிர்க்கலாம்.


மேலும் படிக்க | காபி / டீ -க்கு ஒரு மாதம் 'நோ' சொன்னா என்ன நடக்கும்? என்னென்மோ நடக்கும்... சொல்லி பாருங்க!!


உடலில் வைட்டமின் பி குறைபாடு இருக்காமல் இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்
நம் உடலில் வைட்டமின் பி குறைபாடு ஏற்படத் தொடங்கும் போது, அதன் எச்சரிக்கை அறிகுறிகள் முடியில் தெரியும், முடி உதிர்தல் மற்றும் முடி வறட்சி அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளும் இதில் அடங்கும். எனவே உங்கள் அன்றாட உணவில் வைட்டமின் பி உள்ளதா இல்லையா என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.


இயற்கையான முறையில் வெள்ளை முடியை கருப்பாக்கலாம்
உங்கள் உணவை சரியான நேரத்தில் மாற்றவில்லை என்றால், அது முடிக்கு தீங்கு விளைவிக்கும். இதற்கு வைட்டமின் பி அதிகம் உள்ள பால் பொருட்களை சாப்பிடலாம். இதனுடன், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி12 போன்றவற்றையும் சாப்பிடுங்கள்.


வைட்டமின் பி குறைபாடு ஏன் தீங்கு விளைவிக்கும்
உடலில் வைட்டமின் பி குறைபாடு இருந்தால், முடிக்கு ஆக்ஸிஜன் சப்ளை குறையத் தொடங்குகிறது. பயோட்டின் மற்றும் ஃபோலிக் அமிலத்தின் குறைபாடு இளம் வயதிலேயே முடி நரைக்க வழிவகுக்கிறது, இதன் காரணமாக இளைஞர்கள் சங்கடத்தையும் குறைந்த நம்பிக்கையையும் சந்திக்க வேண்டியிருக்கும்.


இந்த உணவுகளில் இருந்து வைட்டமின் பி கிடைக்கிறது
- பருப்பு
- முழு தானிய
- நட்ஸ்
- பால்
- தயிர்
- சீஸ்
- முட்டை
- பச்சை காய்கறிகள்
- கோதுமை
- காளான்
- பட்டாணி
- சூரியகாந்தி விதைகள்
- வெண்ணெய்
- மீன்
- இறைச்சி
- சர்க்கரை வள்ளி கிழங்கு
- சோயாபீன்
- உருளைக்கிழங்கு
- கீரை
- வாழைக்காய்
- பீன்ஸ்
- ப்ரோக்கோலி


மேலும் படிக்க | hair dye: முடி சாயம் டெம்ப்ரவரியா அழகாக்கும்! ஆனா, வேற பிரச்சனைகளை வரவேற்கும்


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.).


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ