Delta Plus Variant: கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மக்களின் உடல்நலம் மற்றும் மன நலனில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதிலிருந்து நாடு படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றது. ​​கடந்த அக்டோபரில் இந்தியாவில் தோன்றி இந்தியாவின் இரண்டாவது அலைக்கு காரணமான டெல்டா மாறுபாட்டின் நீட்டிப்புதான் புதிய மாறுபாடான டெல்டா பிளஸ். இது பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்டா பிளஸ் மாறுபாட்டின் அறிகுறிகள் என்ன?


முன்னர் கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றின் அறிகுறிகளாக இல்லாத பல அறிகுறிகள் டெல்டா பிளஸ் மாறுபாட்டில் காணப்படுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த மாறுபாட்டால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதிக அளவிலான சோர்வு ஏற்படுகின்றது. இதற்கு முன்னர் இருந்த மாறுபாடுகளை விட டெல்டா பிளஸ்ஸால் பாதிக்கப்படுபவர்களுக்கு மிகவும் வேகமாக உடல்நிலை மோசமாவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.  


டெல்டா பிளஸ் மாறுபாட்டில், வழக்கமான உலர்ந்த இருமல், காய்ச்சல், சோர்வு, உடல் வலி, தோல் வெடிப்பு, கால்விரல்கள் மற்றும் கைவிரல்களின் நிறமாற்றம், தொண்டை வலி, வெண்படல அழற்சி, சுவை மற்றும் வாசனை இழப்பு, வயிற்றுப்போக்கு மற்றும் தலைவலி, மார்பு வலி, மூச்சுத் திணறல் , பேசுவதில் சிரமம், வயிற்று வலி, குமட்டல், பசியின்மை, வாந்தி, மூட்டு வலி, காது கேளாமை போன்ற அறிகுறிகள் காணப்படும் என ஆரம்ப ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


டெல்டா பிளஸ் மாறுபாட்டிலிருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? 


நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் டெல்டா பிளஸ் மாறுபாட்டால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் நேற்று மாலை வரை 9 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


சமீபத்தில், கொரோனா வைரஸின் டெல்டா பிளஸ் மாறுபாடு ஒரு 'கவலை அளிக்கக்கூடிய மாறுபாடு' (VoC) என்று அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக கூறியது. அதிகாரிகளின் கூற்றுப்படி, புதிய COVID மாறுபாடு மூன்று சிறப்பியல்பு அம்சங்களைக் கொண்டுள்ளது, இது முந்தைய வகைகளை விட மிகவும் ஆபத்தானது. 


தற்போதைய நிலவரப்படி, டெல்டா பிளஸ் மாறுபாடு (Delta Plus Variant) கண்டறியப்பட்ட ஒன்பது நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அமெரிக்கா, இங்கிலாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, ஜப்பான், போலந்து, நேபாளம், சீனா மற்றும் ரஷ்யாவில் இந்த மாறுபாடு கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.


ALSO READ: New COVID-19 variant: புதிய டெல்டா பிளஸ் வகை கொரோனா கண்டுபிடிப்பு


நாம் எடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கைகள் என்ன?


நாட்டில் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கின்றது. ஆகையால் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது நமது கையில்தான் உள்ளது. எப்போதும் கவனமாக இருப்பது மற்றும் COVID-க்கான நெறிமுறைகளை கடைப்பிடிப்பது ஆகியவை மட்டுமே வைரஸ் பரவுவதைத் தடுக்க, குறிப்பாக புதிய மாறுபாடுகளை கட்டுப்படுத்த ஒரே வழி. உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாக்க நீங்கள் எடுக்கக்கூடிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இங்கே காணலாம்.


- தனி மனித இடைவெளி, இரட்டை மாஸ்க் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல் ஆகியவை மிகவும் முக்கியமானவையாகும்.


- டெல்டா பிளஸ் மாறுபாடு அதிகமாக பரவக்கூடியது, முந்தைய வகைகளை விட இது வேகமாக பரவுகிறது. ஆகையால் தனி மனித இடைவெளியை பராமரிப்பது மிகவும் முக்கியமானதாகும்.


- வெளியே செல்லும்போது கண்டிப்பாக இரண்டு மாஸ்குகளை அணிய வேண்டும். முக்கியமாக, கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். 


- அடிக்கடி உங்கள் கைகளை கழுவி சுத்திகரிப்பு செய்துகொள்ள வேண்டும். 


மிகவும் தேவைப்பட்டால் மட்டுமே வெளியே செல்லுங்கள்


வெளியில் செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே இருப்பது நல்லது. மிகவும் தேவைப்பட்டால் மட்டுமே வெளியே செல்லுங்கள். கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து செல்லவும். குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருப்பது நல்லது. 


தடுப்பூசிக்கு கண்டிப்பாக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்


சிலர் இன்னும் தடுப்பூசி குறித்த சந்தேகத்தில் இருக்கிறார்கள். ​​வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதற்கான ஒரே வழி தடுப்பூசி மட்டுமே என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். டெல்டா மாறுபாடு உள்ளிட்ட புதிய வகைகளுக்கு எதிராக COVID தடுப்பூசிகள் (COVID Vaccination) திறம்பட செயல்படக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகையால் அனைவரும் முன்வந்து கண்டிப்பாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்.


டெல்டா பிளஸ் மாறுபாடு பரவாமல் தடுக்க அரசாங்கத்தின் உத்திகள் என்ன?


மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்திய பிரதேசத்தில் டெல்டா பிளஸ் மாறுபாடு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கொரோனா வைரஸ் தொற்றின் புதிய மாறுபாடான டெல்டா பிளஸ் மாறுபாடு அதிகமாக பரவிக்கொண்டிருக்கும் மாநிலங்களுக்கு மத்திய அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. "இந்த மாவட்டங்கள் மற்றும் கிளஸ்டர்களில் உடனடியாக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூடுவதை தடுப்பது, பரவலான பரிசொதனை, உடனடி தடமறிதல் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பாதுகாப்பு ஆகியவை உறுதிசெய்யப்பட வேண்டும்" என்று மத்திய அமைச்சகம் கூறியுள்ளது.


ALSO READ: TN Delta Plus Corona: தமிழகத்தில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9ஆக உயர்வு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR