நீரிழிவு நோயாளியா நீங்கள்? எலுமிச்சையை இப்படி பயன்படுத்தினால் சுகர் லெவல் குறையும்
Diabetic Diet: நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், உணவில் எலுமிச்சையைச் சேர்ப்பது இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது என்பதை அறிந்து மகிழ்ச்சியடைவீர்கள். இந்த வழிகளில், உணவில் எலுமிச்சையை சேர்க்க வேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் பொதுவாக தங்கள் உணவில் பல விஷயங்களை தவிர்க்க வேண்டியுள்ளது. உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பது நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கும். சில வீட்டு வைத்தியங்கள் மற்றும் நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் சிலவற்றின் மூலமாகவும், நாம் சர்க்கரை அளவைக் குறைக்க முடியும். எலுமிச்சையைப் பயன்படுத்தி இரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாகும். எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த வைட்டமின் சி உள்ளது. இதன் மூலம் உடலுக்கு வேறு பல நன்மைகளும் கிடைக்கின்றன. சர்க்கரை நோயாளிகள் பலருக்கு எலுமிச்சையுடன் எந்தெந்த பொருட்களை கலந்து சாப்பிடலாம் என்பதில் பெரிய குழப்பம் இருக்கிறது. எலுமிச்சையுடன் சேர்க்கும் பிற பொருட்களால் உடலுக்கு தீங்கு வரக்கூடுமோ என்ற அச்சம் நோயாளிகளுக்கு இருப்பதுண்டு. நீரிழிவு நோயாளிகள் தங்கள் டயட்டில் எந்த வகையில் எலுமிச்சையை சேர்த்தால் நன்மை கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு எலுமிச்சை எவ்வாறு பயனுள்ளதாக இருக்கிறது?
- எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது. இது ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக கருதப்படுகிறது. இது நார்ச்சத்து, அழற்சி எதிர்ப்பு, ஆண்டி-ஆக்சிடெண்ட் பண்புகள் மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இந்த காரணத்தினால் எலுமிச்சை இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது. எலுமிச்சையில் பல சத்தான கூறுகள் உள்ளன. அவை வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த உதவும்.
மேலும் படிக்க | நீரிழிவு நோயை விரட்ட ‘இந்த’ பழத்தின் விதைகளே போதும்! பயன்படுத்தும் முறை!
- உங்கள் உணவில் சிறிது எலுமிச்சை சாற்றை பிழிவது உங்கள் உணவில் எலுமிச்சை சேர்க்க எளிதான வழியாகும்.
- காலையில் ஒரு டம்ளர் எலுமிச்சம் பழச்சாறு குடித்து வந்தால், பல நன்மைகளைப் பெறலாம். இதற்கு வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்தால் போதும்.
- எலுமிச்சை மூலம் டீடாக்ஸ் வாட்டரும் தயார் செய்யலாம். எலுமிச்சம்பழத் துண்டுகளை கிளாசின் பக்கவாட்டில் வைத்து, எலுமிச்சை நீரை உட்கொண்டு உடலில் உள்ள நச்சுகளிலிருந்து விடுபடலாம்.
- சாலடிலும் அனைத்து காய்கறிகளிலும் எலுமிச்சை சாற்றை பிழியலாம்.
- உருளைக்கிழங்கு, அரிசி, பீட்ரூட் போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகளிலும் எலுமிச்சையை பயன்படுத்தவும்.
மேலும் படிக்க | இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் வீட்டில் உள்ள 4 பொருட்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ