நீரிழிவு நோய் என்பது இன்று ஒரு பொதுவான நோயாக மாறிவிட்டது. மோசமான வாழ்க்கை முறையால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. ஆனால், சில சமயங்களில் நீரிழிவு நோய் பரம்பரையாகவும் சிலருக்கும் வரும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க மருந்துகளை உட்கொள்ள வேண்டும். எனவே நீங்கள் சர்க்கரை நோயை இயற்கையான முறையில் குறைக்க விரும்பினால், அதன் இயற்கையான சிகிச்சை மற்றும் அதன் நுகர்வு பற்றிய தகவல்களை இங்கு பெறுங்கள்.
நீரிழிவு நோயை எவ்வாறு கண்டறிவது
உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, அது சர்க்கரை நோய் எனப்படும். இரத்த சர்க்கரையின் அதிகரிப்பு வழக்கமான இரத்த பரிசோதனைகள் மூலம் கண்டறியப்படுகிறது. மேலும், சர்க்கரை நோயினால் உடலில் சிறுநீர் வாசனை, அடிக்கடி பசி, தூக்கமின்மை, தோலின் நிறம் மாறுதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடம்.
மேலும் படிக்க | இலவங்கப்பட்டையின் இதமான நன்மைகள்: குளிர்காலத்தில் உங்கள் கவசமாய் உதவும்
வேப்பிலை உட்கொள்வதன் மூலம் இயற்கையாகவே நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்
இயற்கையாகவே நீரிழிவு நோயைக் குறைக்க வேப்பிலை மிகவும் உதவியாக இருக்கிறது. இதில் அமரோஜென்டின் எனப்படும் உயிர்வேதியியல் கலவை உள்ளது. இது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அத்துடன் இது நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலினாக செயல்படுகிறது .
இயற்கையாகவே சர்க்கரையின் அளவைக் குறைக்க வேண்டுமானால், நிலவேம்பு சாப்பிடலாம். நிலவேம்பை உணவுக்கு முன் டானிக் வடிவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இந்த சாற்றை உட்கொள்ளும் முன், ஒரு முறை மருத்துவரை அணுகுவது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Detox Drinks: உடலின் நச்சுக்களை அகற்றும் சில ‘மேஜிக்’ பானங்கள்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ