Weight Loss Alert: வெந்நீரில் தேன் + எலுமிச்சை கோம்போ யாருக்கு ஆபத்து?

Weight Loss And Lemon + Honey Combo: வெந்நீரில் தேன் மற்றும் எலுமிச்சை உண்மையில் உடல் எடையை குறைக்க உதவுமா? உண்மையில் அப்படியே குறைத்தாலும், சிலருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 8, 2022, 02:20 PM IST
  • வெந்நீரில் தேன் மற்றும் எலுமிச்சை உடல் எடையை குறைக்க உதவுமா?
  • எடை குறைத்தாலும், சிலருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்
  • ஆயுர்வேதம் சொல்லும் எலுமிச்சை + தேன் ஆபத்து காரணிகள்
Weight Loss Alert: வெந்நீரில் தேன் + எலுமிச்சை கோம்போ யாருக்கு ஆபத்து?  title=

Weight Loss And Lemon + Honey Combo:  சிலர் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பார்கள், சிலர் எலுமிச்சை மற்றும் தேன் கலந்த வெதுவெதுப்பான நீரைக் குடிப்பார்கள். இதை குடிப்பதன் முக்கிய காரணம், உடல் எடையை குறைக்கலாம் என்ற நினைப்பு தான்.   தினமும் காலை பானத்தில் எளிதில் தயாரிக்கக்கூடிய இந்த பானத்தில் எந்த பக்க விளைவுகளும் இல்லை. எலுமிச்சை வைட்டமின் சி, ஃபிளாவனாய்டுகள், பொட்டாசியம் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும், தேன் காயங்களை குணப்படுத்த உதவுகிறது, தீக்காயங்களை குணப்படுத்துகிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எலுமிச்சை மற்றும் தேன் கலந்த வெந்நீர் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது என்று கூறும் ஆயுர்வேத நிபுணர் டாக்டர் திக்ஷா பவ்சர், ஆனால் அது அனைவருக்குமானது இல்லை என்று எச்சரித்துள்ளார்.

ஆயுர்வேத நிபுணர்கள் எலுமிச்சை -தேன் தண்ணீரின் நன்மைகள் மற்றும் சிலருக்கு ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றியும் எச்சரிக்கின்றனர். வைட்டமின் சி கொண்டதாக இருந்தாலும் அளவுடன் எடுத்துக் கொள்வதே ஆரோக்கியத்திற்கு நல்லது.

எலுமிச்சை மற்றும் தேன் கொழுப்பை எரிக்க அல்லது கரைக்க உதவுகிறது, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், இந்த பானமே மேஜிக் மந்திரம் என்று நினைத்துவிடாமல், உடற்பயிற்சி மற்றும் உணவையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து அருந்தி வரும்போது, நீண்ட கால அடிப்படையில் இது கல்லீரலை வலுவாக்க உதவுகிறது. வீக்கம் மற்றும் வயிற்று உப்புசம் ஏற்படாமல் பாதுகாக்கிறது. 

மேலும் படிக்க | வைட்டமின் ஈ சத்துக்கும் சரும அழகுக்கும் இவ்வளவு தொடர்பா? வேர்கடலை செய்யும் மாயம்

வெந்நீரில் தேன் மற்றும் எலுமிச்சை குடிப்பதற்கு முன் இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்

வெந்நீரில் அல்ல, வெதுவெதுப்பான நீரில் மட்டுமே தேன் சேர்க்க வேண்டும். வெதுவெதுப்பான நீர் மிகவும் சூடாக இருக்கக்கூடாது. வெந்நீரில் தேன் கலந்தால் அது விஷமாகிவிடும். 1 டீஸ்பூன் தேனுக்கு மேல் சேர்க்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தேனுடன் முதலில் அரை எலுமிச்சை பழத்தை  கலந்து பருகத் தொடங்குங்கள். இது உங்களுக்கு பொருத்தமாக இருந்தால், பிறகு 1 எலுமிச்சைப் பழத்தில் தேனைக் கலந்து பயன்படுத்தவும். 
இது உங்களுக்கு பொருந்துமா என்பதை எப்படி அறிவது?

மேலும் படிக்க | Brain Health: மூளையை பாதிக்கும் ஆபத்தான பழக்கங்களுக்கு ‘NO’ சொல்லுங்க

இது உங்களுக்கு லேசான உணர்வைத் தருகிறது, உங்களுக்கு நெஞ்செரிச்சலைத் தராது, உங்கள் பற்களை புளிப்பு மற்றும் உணர்திறன் கொண்டதாக மாற்றாது, உங்களுக்கு வாய் புண்களை ஏற்படுத்தாது மற்றும் உங்களுக்கு அசௌகரியம் அல்லது சங்கடத்தை ஏற்படுத்தாது.

யாரெல்லாம் வெந்நீருடன் எலுமிச்சை மற்றும் தேன் கலந்த கலவையை பருகக் கூடாது?

மூட்டுவலி, அதிக அமிலத்தன்மை, பலவீனமான எலும்புகள், பலவீனமான பற்கள், வாய் புண்கள் இருந்தால் எலுமிச்சையுன் தேன் சேர்ப்பது உங்கள் நிலையை மோசமாக்கும் என்பதால் இந்த கலவையை அருந்தாமல் இருப்பது நல்லது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | Health Tips: மூளை வளர்ச்சிக்கு உதவும் 'Vitamin B12' நிறைந்த சில உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News