Diabetes Diet Tips: உலகெங்கிலும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுவும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிக வேகமாக உயர்ந்து வருகிறது. இந்தியா நீரிழிவு நோயின் தலைநகரம் என்றும் அழைக்கப்படுகிறது. சொல்லப்போனால் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு சர்க்கரை நோயாளியாவது இருப்பார் என்ற நிலை உருவாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீரிழிவு நோயாளிகள்


சர்க்கை நோயாளிகள் எப்போதும் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கண்காணிக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்காமல் தடுக்கலாம். சர்க்கரை நோயால் இன்னும் பல நோய்கள் வருவதற்கான ஆபத்து உள்ளது என்பதால், இதை கட்டுக்குள் வைத்திருப்பது இதயம், சிறுநீரகம் மற்றும் பல உறுப்புகளின் நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, மக்கள் தினம் தினம் பல்வேறு வகையான முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் அதற்கான மருந்துகளை உட்கொள்கிறார்கள். சிலர் கடுமையான உடற்பயிற்சி, நடைபயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். சிலர் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்கள். நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமான, எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளையே உட்கொள்ள வேண்டும். தங்கள் உணவில் அதிக அளவில் காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். 


சுகர் லெவல் குறைய சர்க்கை நோயாளிகள் இந்த காயை உட்கொள்ளலாம்


சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற காய்கறிகளின் வரிசையில் நூல்கோல் (Turnip) ஒரு முக்கியமான காயாகும். வெங்காயம் போல தோற்றமளிக்கும் நூல்கோல் பல வகையான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட காயாகும். வைட்டமின்கள், ஃபோலேட், நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை இதில் ஏராளமாக உள்ளன. இந்த காய் சர்க்கரை நோயாளிகளுக்கான ஒரு அருமருந்தாக கருதப்படுவதற்கு இதுவே காரணம். இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகின்றன.


சர்க்கரை நோயாளிகள் நூல்கோலை இந்த வகையில் செய்து பயன்படுத்தலாம்: 


1. நூல்கோல் கறி / கூட்டு


பெரும்பாலும் மக்கள் நூல்கோல் கொண்டு கறி, கூட்டு போன்றவற்றை செய்வது வழக்கம். இது மிகவும் சுவையானது மற்றும் எளிதாக சமைக்கக்கூடியது. இதை சமைக்கும் போது எண்ணெயைப் பயன்படுத்துவதைக் குறைக்க முயற்சிக்கவும்.


மேலும் படிக்க | இதயம் உங்களுடையதாக இருந்தாலும், இவை உங்களுக்கு தெரியாது! நீண்ட ஆயுள் வாழ டிப்ஸ்


2. நூல்கோல் ராய்தா


சிலர் உணவில் கண்டிப்பாக ராய்தா செய்து சாப்பிடுவது வழக்கம். அப்படிப்பட்டவர்கள் நூல்கோல் ராய்தா செய்து சாப்பிடலாம். நூல்கோல் ராய்தா மிகவும் ஆரோக்கியமானதாக இருப்பதோடு நீரிழிவு (Diabetes) நோயாளிகளின் ஆரோக்கியத்தையும் இது மேம்படுத்தும்.


3. நூல்கோல் சூப்
குளிர்காலத்தில், நீரிழிவு நோயாளிகள் நூல்கோல் சூப் தயாரித்து குடிக்க வேண்டும். இது குளுக்கோஸ் அளவை பராமரிக்க உதவுகிறது. இதை தயாரிக்க, நூல்கோல் தவிர, நீங்கள் அதன் இலைகள், தக்காளி, கேரட், மஞ்சள், பூண்டு, கருப்பு உப்பு மற்றும் சில மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தலாம்.


4. நூல்கோல் சாலட்
சர்க்கரை நோயாளிகளுக்கு நூல்கோலை சாலடாக சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. இதில் நூல்கோலுடன் தக்காளி, வெங்காயம், எலுமிச்சை சாறு, கருப்பு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | தொப்பை கொழுப்பு கரைய, எடை குறைய.. இந்த 5 பழக்கங்கள் அவசியம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ