இதயம் உங்களுடையதாக இருந்தாலும், இவை உங்களுக்கு தெரியாது! நீண்ட ஆயுள் வாழ டிப்ஸ்

Heart health: இதய நலம் தொடர்பான தடைகளை உடைத்து, தனிநபர்கள் தங்கள் இருதயத்தின் நலனை பேணிகாக்க வேண்டும் என்பதை சொல்லும் விழிப்புணர்வு நாள் செப்டம்பர் 29...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 29, 2023, 10:02 AM IST
  • இதய நலம் தொடர்பான தடைகள்
  • இதயம் தொடர்பான விழிப்புணர்வு
  • இதய விழிப்புணர்வு நாள் செப்டம்பர் 29
இதயம் உங்களுடையதாக இருந்தாலும், இவை உங்களுக்கு தெரியாது! நீண்ட ஆயுள் வாழ டிப்ஸ் title=

World Heart Day 2023: உலக இதய தினம் என்பது உலகெங்கிலும் உள்ள ஒவ்வொருவருக்கும் தங்கள் இதய ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வதன் அவசியத்தை நினைவூட்டுவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாள் ஆகும். இதற்கு நாம், நம் இதயங்களை அறிந்துகொள்வதற்கான இன்றியமையாத விஷயங்களை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதை கருப்பொருளாக கொண்டு, இந்த ஆண்டு உலக இதய தினம் (World Heart Day 2023) அனுசரிக்கப்படுகிறது.  
 
இதய ஆரோக்கியம் பற்றிய அறிவு குறைவாக இருக்கிறது, போதுமான விழிப்புணர்வு இல்லை. இதய நலம் தொடர்பான தடைகளை உடைத்து, தனிநபர்கள் தங்கள் இருதயத்தின் நலனை பேணிகாக்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு நாளாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. உலக இதய தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 அன்று கொண்டாடப்படும் ஒரு முக்கியமான வருடாந்திர நிகழ்வாகும்.

இதயம் மற்றும் விழிப்புணர்வு

இதய நோய் மற்றும் இருதய நோய்களை நிர்வகிப்பதற்கான அதன் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலகளவில் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. 

இந்த நிகழ்வுகள் முக்கியமாக இருதய நோயின் அறிகுறி மற்றும் முன்னெச்சரிக்களைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதில் கவனம் செலுத்துவதாக அமைகின்றன. சிக்கல்களைத் தவிர்க்கவும், இதயம் தொடர்பான நோய்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்க மக்களை ஊக்குவிக்கும் வகையில் இதய தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதயம் தொடர்பான விழிப்புணர்வின் முக்கியத்துவம்
இதயம் மனித உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும், இதயம் செயலிழந்தால் மரணத்திற்கு வழிவகுக்கும், எனவே ஒவ்வொருவரும் இதய ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம். இருதய ஆரோக்கியம் மற்றும் சில வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், இருதய நோய்கள் (CVDs) உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. ஆண்டுதோறும் சுமார் 1.7 கோடி பேர் இருதய நோயால் இறக்கின்றனர், இது உலகளாவிய இறப்புகளில் சுமார் 31% என்பது குறிப்பிடத்தக்கது.

மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோய் ஆகியவை இருதயக் கோளாறுகளால் ஏற்படும் இறப்புகளுக்கு மிகவும் பொதுவான காரணங்கள் ஆகும். இந்த மூன்று இதயக் கோளாறுகளே, இருதய நோய்களால் ஏற்படும் மொத்த இறப்புகளில் கிட்டத்தட்ட 85% மரணங்களுக்குக் காரணமாகின்றன.

எனவே, இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதற்கு உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் தீவிரமாக பங்கேற்க மற்ற அமைப்புகளை ஒன்றிணைப்பதில் உலக இதய தினம் முக்கிய பங்கு வகிக்கிறது.

உலக இதய தின கருப்பொருள் 2023
இந்த ஆண்டு 2023, உலக இதய தினத்தின் கருப்பொருள் “ இதயத்தைப் பயன்படுத்து, இதயத்தை அறி” (Use Heart, Know Heart) என்பது உலகெங்கிலும் உள்ள ஒவ்வொருவருக்கும் தங்கள் இதயங்களைக் கவனித்துக்கொள்ள நினைவூட்டும் நாள் இது.

மேலும் படிக்க | ஹார்ட் பிராப்ளம் இருக்கா? மக்கர் செய்வதற்கு முன்னதாக இதயம் இந்த அறிகுறிகளை காட்டும்

இளமையில் இதய பிரச்சினைகள் இருக்காது!

உங்களுக்கும் இந்த எண்ணம் இருந்தால், நீங்கள் முற்றிலும் தவறு. இதய பிரச்சனைகளுக்கும் வயதுக்கும் சம்பந்தம் இல்லை. நீங்கள் இப்போது எப்படி வாழ்கிறீர்கள் என்பது பிற்காலத்தில் உங்கள் இதய நோய் அபாயத்தை பாதிக்கிறது. குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவத்திலேயே, தமனிகளில் கொழுப்பு குவிய ஆரம்பித்து, பின்னர் தமனிகளில் அடைப்பு ஏற்படலாம்.

இந்த பிரச்சனை இளம் வயதினருக்கும் நடுத்தர வயதினருக்கும் ஏற்படலாம். உடல் பருமன், வகை 2 நீரிழிவு போன்ற இதய நோய்க்கான ஆபத்து காரணிகள் சிறு வயதிலேயே பொதுவானதாகிவிடுவதால் அதன் ஆபத்தும் அதிகமாக உள்ளது.

மாரடைப்பு ஏற்பட்டால் நெஞ்சு வலி வரும் என்பது உண்மையா?

இப்படி நினைப்பவரா நீங்கள்? இந்த தவறான எண்ணத்தை உங்கள் மனதில் இருந்து நீக்குங்கள். நெஞ்சு வலி என்பது மாரடைப்பின் அறிகுறி என்பது உண்மைதான், ஆனால் சில நேரங்களில் மாரடைப்பின் நுட்பமான அறிகுறிகளும் தோன்றும். மூச்சுத் திணறல், குமட்டல், தலைச்சுற்றல் மற்றும் ஒன்று அல்லது இரண்டு கைகள், தாடை, கழுத்து அல்லது முதுகில் வலி அல்லது அசௌகரியம் ஆகியவை இதில் அடங்கும்.

கட்டுப்பாட்டில் இருந்தால், நீரிழிவு இதயத்திற்கு  அச்சுறுத்தலை ஏற்படுத்தாதா?

சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது, இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம், ஆனால் அதனால் எந்த வித ஆபத்தும் இல்லை என்று அர்த்தமில்லை. இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருந்தாலும், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். ஏனென்றால், உங்களுக்கு நீரிழிவு நோயை ஏற்படுத்திய அதே ஆபத்துக் காரணிகள் உங்கள் இதயப் பிரச்சனைகளை உருவாக்கும் வாய்ப்புகளையும் அதிகரிக்கின்றன. இந்த ஆபத்து காரணிகளில் உயர் இரத்த அழுத்தம், அதிக எடை மற்றும் உடல் பருமன், உடல் செயலற்ற தன்மை மற்றும் புகைபிடித்தல் ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்க | தினமும் பால் குடித்தால் இதயத்திற்கு நல்லதா..? மருத்துவர்கள் கூறுவது இதுதான்..!

இளம் வயதில் கொலஸ்ட்ரால் பரிசோதனை அவசியமா?
நீங்களும் இப்படி நினைத்தால் உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள். 20 வயதில் தொடங்கி ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் உங்கள் கொலஸ்ட்ரால் பரிசோதிக்கப்படுவது நல்லது. அதிலும், உங்கள் குடும்பத்தில் இதய நோய் வரலாறு இருந்தால், இதற்கு முன்பே கொலஸ்ட்ரால் பரிசோதனையை ஆரம்பிக்கலாம்.  

இதய செயலிழப்பு என்றால் என்ன?
இதய செயலிழப்பின் போதும், ​​இதயம் வேலை செய்கிறது, ஆனால் அது தேவையான அளவு இரத்தத்தை பம்ப் செய்ய முடியாது என்பதால், சுவாசிப்பதில் சிரமம், கால்கள் மற்றும் கணுக்கால் வீக்கம், அல்லது தொடர்ந்து இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படலாம். மாரடைப்பின் போது நபர் சுயநினைவை இழந்து இயல்பாக சுவாசிப்பதை நிறுத்திவிடுகிறார்.

மாரடைப்புக்குப் பிறகு உடற்பயிற்சி செய்யலாமா?
நீங்களும் அப்படி நினைத்தால் அது தவறு. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் சிறந்த இதய ஆரோக்கியத்திற்காக வாரத்திற்கு குறைந்தது இரண்டரை மணிநேரம் மிதமான தீவிர உடல் செயல்பாடுகளை பரிந்துரைக்கிறது. ஆனால் நீங்கள் எந்த வகையான உடற்பயிற்சி செய்ய வேண்டும் மற்றும் எந்த முறையில் செய்ய வேண்டும் என்பது குறித்து நிபுணரிடம் கண்டிப்பாக ஆலோசனை பெறவும்.

மேலும் படிக்க | மாரடைப்பு வந்தவரா? மீண்டும் இதயம் செயலிழக்காமல் இருக்க, கார்டியாலிஸ்ட் தரும் டிப்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News